புடவை, ஹீல்ஸ் அணிந்துகொண்டு தண்டால் எடுக்கும் மந்த்ரா பேடியின் அசத்தல் வீடியோ

கிரிக்கெட் வர்னனையாளர் மந்த்ரா பேடி, புடவை மற்றும் ஹீல்ஸ் அணிந்துகொண்டு புஷ்-அப்ஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை, கிரிக்கெட் வர்னனையாளர் என பன்முகம் கொண்ட மந்த்ரா பேடி, புடவை மற்றும் ஹீல்ஸ் அணிந்துகொண்டு புஷ்-அப்ஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

45 வயதாகும் மந்த்ரா பேடி தற்போதும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். ஆரோக்கியமான உணவு பழக்கம், உடற்பயிற்சி என வாழ்வியல் முறையைக் கடைபிடித்து வருவதே அவரது இந்த ஆரோக்கியமான உடலுக்கு காரணமாகும். சமீபத்தில் தொலைக்காட்சி ஸ்டண்ட் நிகழ்ச்சியிலும் மந்த்ரா பேடி வெற்றி பெற்றார்.

தான் உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்து வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள், அவ்வப்போது சோர்ந்து போய்விட்டால் மந்த்ராவின் இன்ஸ்டகிராம் புகைப்படங்களை ஒருமுறை பார்வையிட்டால் போதும். புத்துணர்ச்சி பெற்றுவிடுவார்கள்.

Look back.. But never in regret..

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

இந்நிலையில், புடவை மற்றும் ஹீல்ஸ் அணிந்துகொண்டு நபர் ஒருவருடன் மேடையில் புஷ்-அப்ஸ் எடுக்கும் வீடியோவை தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் மந்த்ரா பேடி.

பெண்கள் உடல் வலிமையுடன் இருந்தால், எந்த நிலைமையிலும் எந்த நேரத்திலும் எதுவும் சாத்தியமே என்பதற்கு உதாரணமாக அந்த வீடியோ இருந்தது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close