மலையாள நடிகை ப்ரியா வாரியர் மீது தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது மேலும் வழக்கு தொடர்ந்தவர்கள் மீது நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
ப்ரியா வாரியர் மீது வழக்கு:
மலையாள நடிகை ப்ரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ மாணிக்ய மலரே பூவி’ பாடல் வைரலானது. அதில், ப்ரியா வாரியரின் கண் சிமிட்டும் அசைவுகள் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது.
இந்நிலையில், ப்ரியா வாரியரின் கண் சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த பாடல் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த வழக்குகளை எதிர்த்து நடிகை பிரியா வாரிய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று(31.8.18) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரியா வாரியர் மற்றும் இயக்குனர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ` படத்தில் யாரோ பாடல் பாடுகிறார்கள், நடிக்கிறார்கள், உங்களுக்கெல்லாம் வழக்குப் போடுவதைத் தவிர வேறு வேலையே இல்லையா’ என்று வழக்கு தொடர்ந்தவர்களை நீதிபதிகள் எச்சரித்தனர்.
அதனை தொடர்ந்து நடிகை ப்ரியா வாரியரின் நடிப்பு யார் மனதையும் புண்படுத்துவதாக இல்லை என்று தெரிவித்தது. மலும், அவர்மீது கூறப்பட்டுள்ள குற்றவியல் புகார்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.