பஞ்சாயத்தை கூட்டிய மகன்... அடித்து நொறுக்கும் அப்பா; மொத்த ஃபேமிலியும் செய்த சம்பவம் தான் நோபடி- 2!

மிகவும் பொறுமையாக காணப்படும் ஹட்ச் மான்செல் முன்னாள் அரசு அதிகாரி ஆவார். அவரது தந்தை டேவிட் ஒரு எஃப்.பி.ஐ ஏஜெண்ட் ஆவார். இப்போது ஹட்ச் ஒரு ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருவார்.

மிகவும் பொறுமையாக காணப்படும் ஹட்ச் மான்செல் முன்னாள் அரசு அதிகாரி ஆவார். அவரது தந்தை டேவிட் ஒரு எஃப்.பி.ஐ ஏஜெண்ட் ஆவார். இப்போது ஹட்ச் ஒரு ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருவார்.

author-image
WebDesk
New Update
Nobody 2 review Bob Odenkirk  Prime Video OTT india Tamil News

முதல் பாகம் போலவே 2-ம் பாக படம் எங்கேயும் சலிப்பு தட்டாமல் ஓடும். ஆக்சன், காமெடி, திரில்லர் சீன்கள் படம் பார்ப்போரை தொடர்ந்து பார்க்க தூண்டும்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான படம் நோபடி. இதில், ஹாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் பாப் ஓடென்கிர்க் - கோனி நீல்சன் கணவன் மனைவியாக நடித்திருப்பர்.  ஹட்ச் மான்செல் - பெக்கா மான்செல் தம்பதியாக வரும் அவர்களுக்கு பிராடி மான்செல் (கேஜ் மன்றோ) - சமி மான்செல் (பைஸ்லி கடோரத்) என்ற மகனும், மகளும் இருப்பவர். 

Advertisment

மிகவும் பொறுமையாக காணப்படும் ஹட்ச் மான்செல் முன்னாள் அரசு அதிகாரி ஆவார். அவரது தந்தை டேவிட் ஒரு எஃப்.பி.ஐ ஏஜெண்ட் ஆவார். இப்போது ஹட்ச் ஒரு ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருவார். அதாவது, சின்டிகேட் எனப்படும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இருந்து செயல்பட்டு வருவார். இப்படி வாழ்க்கை செல்ல, அவரின் வீட்டை சில திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சிக்க, அவர்களை தனது அசாத்திய திறனால் வெளுத்து வாங்குவார் ஹட்ச் மான்செல். அந்த சண்டை தொடங்கும் போதே படம் ஆக்சன் ஆக இருக்கும் என இயக்குநர் பதிய வைப்பார். 

இதன்பிறகு, பஸ்சுக்குள் நடக்கும் பைட் சீன்கள் மிரட்டலாக இருக்கும். அதில் ரஷ்ய மாஃபியா கும்பலின் தம்பி ஒருவரை கொல்ல, அதற்கு பழிதீர்க்கும் படலம் தொடங்கும். ஹட்ச் மான்செல் யார் என்பதை கண்டறிந்து அவரை கொல்ல வீட்டு ஆட்களை மாஃபியா கும்பல் தலைவன் யூலியன் அனுப்ப, வந்த அனைவரையும் புரட்டி எடுத்துவிடுவார். கடைசியில், மாஃபியா கும்பல் தலைவனையும் அவனது ஆட்கள், பணம் ஆயுதம் என அனைத்தையும் அழிப்பார் ஹட்ச் மான்செல். 

இதன் தொடர்ச்சியாக இல்லாவிட்டாமலும், ஹட்ச் மான்செல் அடுத்து எப்படி வசித்து வருகிறார்?, இதுபோன்று அடுத்த எதாவது சம்பவம் செய்கிறாரா என்பதே நோபடி படத்தின் இரண்டாம் பாகம். முதல் படத்தை போலவே அவரை கைது செய்த அதிகாரிகள் அவரையும், அவரது மனைவியையும் 'நீங்கள் யார்?' என கேட்க நோபடி என்று சொல்லி படம் தொடங்குகிறது. வழக்கம் போல் அசைன்மென்ட்களை செய்து வரும் ஹட்ச் மான்செல், ரஷ்ய மாஃபியா கும்பலை அழித்தற்கான கடனையும் கட்டி வருவார். 

Advertisment
Advertisements

இடையில் பிரேக் வேண்டும் எனவும், அந்த நேரத்தை தனது குடும்பத்துடன் பகிர வேண்டும் எனவும் கேட்டு, ப்ளூமர்வில்லே நகரில் இருக்கும் 'பிளாக் தண்டர்' போன்ற இடத்து செல்கிறார். அங்கே அவரது மகன் லோக்கல் கை-யின் மகனுடன் சண்டையிட பஞ்சாயத்து பெரியதாகிறது.  அந்த லோக்கல் கை யார்? அவருக்கு மேல் இருக்கும் அந்த லேடி டான் யார்? லோக்கல் கை-யுடன் சேர்ந்து ஹட்ச் மான்செல் லேடி டானை ஏன் எதிர்க்கிறார்கள்? எனபதே படத்தின் மீதிக்கதை. 

முதல் பாகம் போலவே 2-ம் பாக படம் எங்கேயும் சலிப்பு தட்டாமல் ஓடும். ஆக்சன், காமெடி, திரில்லர் சீன்கள் படம் பார்ப்போரை தொடர்ந்து பார்க்க தூண்டும். சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டலாக இருக்கும். இடையில் ரத்தக் களரியாக இருந்தாலும், அவை முகம் சுளிக்க வைக்காத வண்ணம் இருக்கும். ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படம், தாங்கள் சொல்ல வந்ததை தெளிவாகவும், நச் என்றும் சொல்லிவிட்டு சென்று இருப்பார்கள். 

அதனால், குடும்பத்தினருடன் பார்க்க நல்ல படமாகவும் இது இருக்கிறது. ஆக்சன் பட பிரியர்கள் தவறலாமல் பார்க்கலாம். முதல் பாகம் பார்த்த மக்களுக்கு சொல்ல வேண்டியதே இல்லை. முதல் பாகத்தை விட இந்தப் படத்தில் ஆக்சன் சற்று தூக்கலாகவே இருக்கிறது. நீங்கள் முதல் பாகம் பார்க்காதவராக இருந்தாலும் இரண்டாம் பாகம் புரியும். ஆனாலும், முதல் பாகம் பார்த்து விட்டு இரண்டாம் பாகம் பார்க்க சென்றால், படம் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.  

நோபடி படத்தை அமேசான் வீடியோ, ஜியோ ஸ்டார், ஜி5 உள்ள ஓ.டி.டி தளங்களில் பார்க்கலாம். நோபடி 2 படத்தை அமேசான் வீடியோ ஓ.டி.டி தளத்தில் பார்க்கலாம். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: