ஜனநாயகம் அல்ல; போர்க்களம் : திரையுலக பிரபலங்கள் கருத்து

அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு ஆதரவாக திரையுலகினர் கருத்து.

By: September 2, 2017, 12:00:33 PM

மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ கல்லூரியில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதால் அரியலூர் மாணவி அனிதா நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு திரையுலக பிரமுகர்கள் ட்விட்டரில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் விபரம் வருமாறு:

நடிகர் சிவகார்த்திகேயன் :

இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது…என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.

இயக்குநர் பா.ரஞ்ஜித்:

ஒரு தலைமுறையின் பெருங்கனவை சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும்.

இயக்குநர் ராம் :

நீட் ஒரு அரசபயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்.

இயக்குநர் சீனு ராமசாமி :

டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல.நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.இதய அஞ்சலி.

நடிகர் விவேக் :

அனிதாவின் அவசரம் பிற மாணவர்களுக்குமுன்னுதாரணம் அல்ல.கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலையா?”விமானஓட்டி”கனவு நிறைவேறாதவர்தான் கலாம்.

கபிலன் வைரமுத்து :

அடிப்படை உரிமைகளைக் கூட வீதிக்கு வந்து போராடித்தான் பெறவேண்டும் என்ற சூழலுக்கு பெயர் ஜனநாயகம் அல்ல. போர்க்களம்.

நடிகை நிக்கி கல்ராணி :

எந்த விஷயத்துக்கும் தற்கொலை முடிவல்ல. ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்: 

அனிதாவின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லியுள்ளார், ஜி.வி.பிரகாஷ். அதோடு தன்னுடைய கருத்துக்களை விடியோவாகவும், ட்விட்டரிலும் கருத்துதெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Not democracy battlefield cinematic celebrities comment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X