தமிழ் சினிமாவில் வன்முறை... லோகேஷ் கனகராஜ் முன்னோடியே கமல்ஹாசன் தான்

இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடும் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உள்ள பல விஷயங்களைப் போலவே, சினிமாவில் ரத்தக் காட்சிகளை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறார்.

இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடும் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உள்ள பல விஷயங்களைப் போலவே, சினிமாவில் ரத்தக் காட்சிகளை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Voilence Movie

கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் படிக்க : Not Lokesh Kanagaraj but Kamal Haasan is the poster boy of violence in Tamil cinema

Advertisment

தற்போதைய தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப் குமார் ஆகியோரின் படங்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், இதற்கு ஆரம்ப புள்ளி வைத்தவர் நடிகர் கமல்ஹாசன் என்று சொல்ல்லாம். இன்று (நவம்பர் 7) கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியுள்ள அவரின் தங்க் லைஃப் படத்தின் டீசர் சிறந்த உதாரணமாக சொல்ல்லாம்.

தங்க் லைஃப் படத்தின் டீசரில் தனது பெயரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், காயல்பட்டிணக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் கமல்ஹாசன், தன்னை தாக்க வரும் ஒருவரின் மூக்கை உடைக்கிறார்.  மற்றொருவரின் கழுத்தில் ஒரு மரக் கட்டையை வீசுகிறார். அதிரடி ஆக்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த காட்சிகள் பிரதான சினிமாவுக்கு மிகவும் வன்முறை என்று கூறப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் படங்களில் இது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவின் பிரதானமாக மாறியுள்ளது. ஹாலிவுட் இயக்குனர் குயின்டின் டரான்டினோவின் திரை மொழியில் வன்முறை "மிகவும் வேடிக்கையாக" மாறிவிட்டது. இத்தகைய திரை வன்முறையின் தாக்கம் பற்றிய விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் அதன் வெற்றிக்கான காரணத்தை லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

லியோ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளின் போது லோகேஷ் பங்கேற்ற பல நேர்காணல்களில், நிஜ வாழ்க்கை வன்முறைக்கும் தனது படங்களில் உள்ள வன்முறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. நாங்கள் கத்தியால் குத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்த்து ரசிப்பதில்லை. நிஜம் என்பதால் விலகிப் பார்ப்போம். சினிமாவில், பின்னணி இசை மற்றும் உள்ளிட்ட சில பொழுதுபோக்கு அம்சங்கள் காரணமாக அதை வேடிக்கையாக ஆக்குகிறோம். அது உண்மையல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் என்று தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் புதிய ரத்தப் புரட்சியை ஏற்படுத்தியவர் லோகேஷ் என்று சொல்லப்படும் அதே வேளையில், அதையெல்லாம் கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டார் என்பதை சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. தமிழ் சினிமாவில் பல விஷயங்களைப் போலவே ரத்தம் தோய்ந்த காட்சிகளை உருவாக்குவதில் கமல்தான் முன்னோடி. லோகேஷ் மற்றும் நெல்சன் போலல்லாமல், கமல் வன்முறையை ரசிப்பதற்காக மட்டும் பயன்படுத்தாமல், பார்வையாளரின் மீது என்றும் அழியாத தாக்கத்தையும் ஏற்படுத்தினார்.

சமீபகால தமிழ் சினிமாவில் நாம் பார்க்கும் வன்முறை காட்சிகளில் இருந்து கமல்ஹாசனின் வன்முறை முத்திரை வேறுபட்டது. ஜெயிலரிடமிருந்தோ விக்ரமிடமிருந்தோ நீங்கள் பார்த்த்தை போல் அவரது படங்களில் வேடிக்கை எதுவும் இல்லை. கமல் படத்தில் நடக்கும் வன்முறைகள் ஒருவருக்கு அசௌகரியத்தையும் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். கார்த்தியின் பருத்திவீரன் (2007) அதன் க்ளைமாக்ஸில் முத்தழகு லாரி ஓட்டுநர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதால் பலருக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்த காட்சியில் நடந்த வன்முறை குடல் பிடுங்குவதாக மாறியது, பார்வையாளர்களை வாழ்நாள் முழுவதும் வடுவை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த காட்சியை பெரிதாக எழுத்துக்கொள்ளாமல், அதன் தன்மையைப் பொருட்படுத்தாமல், மக்கள் ரசித்த்தால் படம் பெரிய வெற்றியை பெற்றது. இத்தகைய வன்முறை ஒரு திரைப்படத்தை எவ்வாறு இயக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். பருத்திவீரனுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, கமல்ஹாசனின் ஹே ராம் (2000) திரைப்படத்தில், ஆகஸ்ட் 16, 1946 அன்று நேரடி நடவடிக்கை தினத்தின் போது ராணி முகர்ஜியின் அபரண பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றது. அந்தச் சம்பவம் சாகேத் ராம் (கமல்) வாழ்க்கையை மாற்றும். கமலின் பல படங்களைப் போலவே, ஹே ராம் படத்தின் மிருகத்தனத்தையும் விரைவில் மறந்துவிட்டது.

குருதி புனல்

குருதி புனல் (1995) – ரிவர் ஆஃப் ப்ளட், இந்த படத்தின் தலைப்பே படத்திற்கு பெரிய விளக்கத்தை கொடுக்கிறது. இந்தியில் ஓம் பூரியின் த்ரோக்காலின் (1994) என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இந்த படத்தில் வன்முறை வந்தபோது, ​​கமல்ஹாசன் அதை மிகவும் யதார்த்தமாக்கினார். கமல் மற்றும் அர்ஜுன் இருவரின் கதாபாத்திரங்களும் தீவிரவாதிகளால் கடத்தப்படுகின்றன. 'விசாரணைகளுக்கு' பிறகு, அவர்களின் முகம் எல்லாம் பலத்த காயத்துடன் பயங்கரமாக இருக்கும். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படத்தின் இயக்குனராக இருப்பதால், ரத்தமும் சதையுமாக ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்குத் தெளிவாகப் காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.

விருமாண்டி

விருமாண்டி படத்தின் சமீபத்திய டிரெய்லரைப் பார்த்தால் படத்தின் தொனியை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. தேனியில் உள்ள சின்ன கொளருப்பட்டி என்ற கிராமத்தில் நடக்கும் இந்த கொடூரமான கிராமிய கதையில் பல கொலைகள் நடக்கின்றன. விருமாண்டி (கமல்) நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும் ஒரு நிலத்தை வைத்திருக்கிறார். முழு கிராமமும் அதன் பின்னால் இருக்கிறது, ஆனால் விருமாண்டி தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி அறியாத ஒரு ஆளாக இருக்கிறார். படம் ஒரு படுகொலையையும் அதன் பின்விளைவுகளையும் மிக விரிவாகப் காட்டியுள்ளது. படத்தின் இயக்குனரான கமல், தனது கதாநாயகன் மீது குற்ற உணர்வை வெளிப்படுத்த வன்முறையை அற்புதமாக காட்சிபடுத்தியிருப்பார். முடிவில், அன்னலட்சுமிக்கு (அபிராமி) எதிரான வன்முறையின் பொய்யான சாட்சியங்கள் மூலம் அவரது வாழ்க்கை கொடூரமாகிறது.

இந்த காட்சி உங்களை நெகிழவைக்கவில்லை என்றாலும், க்ளைமாக்ஸில் வில்லன் கொத்தலா தேவர் (பசுபதி) விருமாண்டியால் எப்படி கொல்லப்படுகிறார் என்று பாருங்கள். கமல் வில்லனின் கழுத்தில் விரல்களைத் துளைக்கிறார். மீண்டும் அதையே செய்யும்போது  அதே இடத்தில் சிறிய இரத்த ஊற்று இருக்கும். அந்த வேதனையில் வில்லன் குரல் எழுப்புவார். இந்த இடத்தில் அனிருத் ரவிச்சந்தர் போன்ற இசையமைப்பாளர்களின் இசை இருக்காது. கோத்தல தேவர் தனக்குரிய தண்டணையை பெற்றதில் பார்வையாளர் மகிழ்ச்சியடையும் அதே வேளையில், படத்தில் வன்முறை இன்னும் அதிகமாகத் தான் இருக்கும்.

ஆளவந்தான்

இந்தப் படத்தின் அனிமேஷன் காட்சியால் ஹாலிவுட் இயக்குனர் குவென்டின் டரான்டினோ ஈர்க்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. நந்து (கமல்ஹாசன்) ஒரு ஸ்கிசோஃப்ரினிக் இரட்டையர். அவர் தனது இரட்டை சகோதரனை அவரது வருங்கால மனைவியிடமிருந்து காப்பாற்றுவதை தனது வாழ்க்கையின் பணியாகக் கொண்டுள்ளார். நந்து, தன் சகோதரனின் காதல், இறந்த சித்தியின் மறுபிறவி என்று உறுதியாக நம்புகிறான். அவரது பணியின் போது, நந்து தன்னை அரக்கான காட்டிக்கொள்கிறார், இது பற்றிய முழு காட்சியும் கார்ட்டூன் அனிமேஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த காட்சிகள் இன்னும் மிருகத்தனமாக நிர்வகிக்கிறது.

தனது சித்தியை கொள்ளும் நந்து அவளுடைய இரத்தத்தைப் பயன்படுத்தி சுவரில் தன் கவிதையை எழுதுகிறான். ஆனால் ஆளவந்தான் பெரும் தோல்வியடைந்தது, இதன் விளைவாக கமல்ஹாசனுக்கும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவுக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் விரிசல் ஏற்பட்டது. இந்த கட்டுரையில் உள்ள படங்களின் பட்டியலை நீங்கள் பார்த்தால், அவை பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை. இந்த படங்கள் குறித்து இன்றும் பேசப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamalhaasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: