தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகியிருக்கும் நோட்டா படத்தின் பட விளம்பரம் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டா படம் அறிவிப்பு :
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படத்தின் விளம்பரத்தை செப்டம்பர் 6ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதனை விஜய் தேவரகொண்டா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “நான் அரசியலை வெறுக்கிறேன். ஆனால், அதனை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தால், இப்படிதான் செய்வேன்.”
I bloody hate politics.
But if I have to do it.
This is how I get it done.#NOTA48 hours to Sneak Peak.
72 hours to Trailer. pic.twitter.com/aI2enf6Wja— Vijay Deverakonda (@TheDeverakonda) 3 September 2018
சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 4-ல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.