NOTA Review : விஜய் தேவரகொண்டா, நாசர், மெஹ்ரீன் பிரசாடா, சஞ்சனா நடராஜன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நோட்டா.
அரசியல், அப்பா மகனாகக் கூட இருந்தாலும் அடித்துக் கொள்ள வைக்கும் என்பதை சொல்லியிருக்கின்றார் டைரக்டர். அப்பா நாசர் வழக்கு ஒன்றில் சிக்கி பதவியை இழக்கும் சூழல் வரும்போது, வெளிநாட்டில் இருக்கும் மகன் விஜய் தேவரகொண்டா தன்னுடைய அம்மாவின் நினைவு தினத்திற்காக வருகின்றார்.
அவரை தற்காலிக முதல்வராக்குகின்றார் நாசர். பின்பு அப்பாவே மகனுக்கு எதிராக திரும்பக்கூடிய சூழல் உருவாகின்றது. மேலும் எதிர்க் கட்சித் தலைவரின் மகள் ஆளுங்கட்சிக்கெதிராக சுழற்றும் வாள்வீச்சு, முதல்வரான விஜய்தேவரகொண்டாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகின்றது.
இதை பத்திரிக்கையாளராக வரும் சத்யராஜின் மகள் மெஹ்ரீன் துணையுடன் எப்படி மீள்கின்றார்? என்பதே கதையின் வடிவம். முதலமைச்சராக நாசர், அரசியல்வாதிகளின் அக்மார்க் ஸ்டைலை அப்படியே நினைவுப் படுத்துகின்றார். அவரின் மகனாக தெலுங்கில் இருந்து தமிழுக்கு நேரடியாக அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா. தமிழுக்கு அறிமுகமான முகம் போலவே இருப்பது போன்று தெரிந்தாலும், மெல்லிய தெலுங்கு சாயல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
சத்யராஜ் ஆசிரம நிர்வாகியாக வருகின்றார். சஞ்சனா நடராஜன் எதிர்க்கட்சி தலைவரின் மகளாக ஆக்ரோஷம் காட்டுகின்றார். அரசியல் படமெடுப்பதும் அதை சர்ச்சைகள் இல்லாமல், அதேநேரம் நிகழ்கால அரசியலை சாடுவதும் இயல்பாக வராது. ஆனால் ஆனந்த் சங்கர் அனுபவ இயக்குநர்போல் இயக்கியிருப்பது பாராட்டுக்குறியது. அதே நேரம் காட்சிகள் யூகிக்கமுடிவதும் வழக்கமான காட்சியமைப்புகளும் வசனங்களும் இருப்பது சற்று பின்னடைவே. இசை சாம் ஓகேரகம் தான். ஒளிப்பதிவு பாராட்டலாம்.
நோட்டா சினிமா ரசிகர்கள் ஆதரவு 50%
ஆர்டினரி ரசிகர்கள் 50%
பொதுமக்கள் 60%
திராவிட ஜீவா