என்.டி ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழகத்துக்கு எம்.ஜி.ஆர் என்றால், ஆந்திராவுக்கு என்.டி.ஆர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர், அரசியல்வாதி என அனைத்திலும் முதன்மையாக திகழ்ந்த என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இன்றுடன் (ஜன.18) அவர் இறந்து 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த தினத்தில் அவரது பயோபிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

ராமாராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா, ராமாராவ் வேடத்தில் நடிக்கிறார். தேஜா என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

அரசியலில் நுழைந்து பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி யாரும் அசைக்க முடியாத முதலமைச்சராக எழு ஆண்டுகள் ஆந்திராவை ஆண்ட என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது, ஆந்திர மக்கள் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்திய தேசமும் அவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே.

×Close
×Close