Official Release Promo of ‘DARBAR ‘ : ரஜினிகாந்தின் 167-வது படமாக வெளிவரும் தர்பார் படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
தர்பார் படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 7ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. பொங்கல் திருநாள் அன்று வெளியாகும் என்று எதிரப்பர்க்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 9ம் தேதி படம் உலகம் முழுவதும் திரையிடப்படம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !
தர்பார் படத்தின் ப்ரோமோ :
தர்பார் படத்தின் முதல் புரமோ நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.32 நொடிகளை கொண்ட இந்த ப்ரோமோ வீடியோவில் 12 நொடிகளே காட்சிகள் உள்ளன. மிச்சம் 20 நொடிகள் தர்பார் படத்தின் போஸ்டர் தான்.
இவருக்கு 70 வயசாம்; அடப் போங்கயா! – சுடச்சுட தர்பார் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோஸ்
இந்த ப்ரோமோ- ரஜினி காந்த், நயன்தாரா இடையிலான உரையாடல்கள் மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளன. ப்ரோமோவில், மருத்துவமனை வாசலில் ரஜினி நயன்தாராவிடம் ஏதோ சொல்ல வருவது போல திக்குகிறார், அதற்கு நயன்தாரா எனக்கு உருது மொழி தெரியாது என்று கூறுகிறார். மேலும் அருகில் உள்ள செவிலியரிடம் நீங்கள் இவரை இஎன்டி மருத்துவமனைக்கு இட்டு செல்லுங்கள் என்பது போல் காட்சிகள் காட்டப்படுகின்றன.
தோழர்களே, # தர்பாரில் தலைவரின் அழகான, காதல் காட்சிகளின் ஒரு கண்ணோட்டம் என்று பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Here you go guys, a sneak peek of the charming and romantic side of Thalaivar in #Darbar #Darbarpongal @rajinikanth #Nayanthara @SunielVShetty @LycaProductions @anirudhofficial @santoshsivan @iYogiBabu @i_nivethathomas @prateikbabbar https://t.co/NpwVnE7FUV
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 1, 2020
ப்ரோமோ வரும் கமெண்ஸ்கள்:
பக்கத்தில் நயன்தாரா போனாலும் கண்ணு தலைவர் ஷூட் செய்யும் ஸ்டைல் மேலத்தான் ????????????????!#DarbarFromJan9 pic.twitter.com/XzgRIhf6iG
— Thalaivar Darbar ???? (@Vijayar50360173) January 1, 2020
Sneak peak oru 2 mins vidunga sir pls ????.12 sec la rombha kammi sir ???? #darbar pic.twitter.com/aziFp1A3am
— JAY kk ???? ᴰᴬᴿᴮᴬᴿ???? (@JAYkk52997979) January 1, 2020
Get Set Shooooot the Box office records ! ????????
Emperor arriving in 8 days !!! ????????#Darbar #DarbarPongal #DarbarFromJan9 pic.twitter.com/Jvjq2EZ01e
— ரௌடி (@Rowdy_3_) January 1, 2020
தரமான செய்க???????? pic.twitter.com/mbj81Rddzc
— Murugesh (@murugesh_ariyal) January 1, 2020
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Official release promo of darbar film rajinikanth nayanthara sneak peek