Oh My Kadavule Review : அஸ்வத் மாரிமுத்து இயக்கி அசோக் செல்வன் நடித்துள்ள “ஓ மை கடவுளே” படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. ரித்திகா சிங் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ஜி தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
Live Blog
Oh My Kadavule Movie Review and Rating Live Updates
ஓ மை கடவுளே திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்
’ஓ மை கடவுளே’ படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்திருப்பதால், அவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வாணி போஜன் வரும் காட்சிகளில் எல்லாம் வசீகரிக்கிறார். எதார்த்தமான நடிப்பு அவரது பலம்
ரித்திகா சிங், நண்பராக இருக்கும் போது வெகுளியாக இருப்பவர், மனைவியான பின் கணவரை சந்தேகப்படும் காட்சிகளில், கதாபாத்திரமாகவே மாறி கலக்கி இருக்கிறார்.
நாயகன் அசோக் செல்வன், இரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் இளைஞன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குறும்பான நண்பராகவும், ஜாலியான கணவராகவும் படம் முழுக்க வருகிறார்.
ஓ மை கடவுளே திரைப்படம் காதல் , பிரண்ட்ஷிப் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளதால் பெருவாரியான இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் அசோக் செல்வன் -ரித்திகா சிங் பிரிந்து விவாகரத்து பெற முடிவு செய்யும்போது விஜய் சேதுபதி வழக்கறிஞராக வந்து கதையை சுவாரஸ்யப்படுத்துகிறார்.
சிறு வயதில் இருந்தே அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். வாலிபம் வந்த பின்பும் இவர்களின் நட்பு தொடர்கிறது. நண்பனாக இருக்கும் அசோக் செல்வனே கணவரானால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என கருதும் ரித்திகா சிங், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். அசோக் செல்வனும் அதற்கு சம்மதிக்கிறார்.
நட்பு, காதல் அவற்றிற்கு இடையேயான பிரச்னைகள் குறித்து ஆழமாக பேசியிருப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளார்
காதலர்களுக்கு காதலர் தினத்துக்கு சரியான விருந்து என டிஸைனர் கோபி பிரசன்னா தெரிவித்துள்ளார்.
பிரிந்திருக்கும் நிறைய காதலர்களை இந்தப் படம் சேர்த்து வைக்கும், அது தான் இந்தப் படத்துக்கு உண்மையான வெற்றி என ஆன்லைன் விமர்சகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.