சோஷியல் டாக்கீஸ் யூடியூப் சேனலில், வீரமணி ராஜு, தனது அனுமபவத்தை பற்றி விவரமாக பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது: ” ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து அவர்தான் இருந்தார். படம் முடியும்போது அந்த பாடல் வரும். இப்பவும் படத்தில் இருக்கிறது. வீரமணி சித்தப்பா சொல்லுவார், சீர்காழி, டி.எம்.ஸ், வீரமணி, பிபிஎஸ், ஈஸ்வரி, சுசிலா, வானிஜெயராமன் அனைவரும் ஒரே செட். சில நேரம் டி.எம்.எஸ் வர முடியாமல் போனால், நான் அதற்கு பதிலாக இடம்மாற்றப்படுவேன். நான் ஒரு 12th மேன் மாதிரி. சீர்காழி வரவில்லை என்றாலும் இதுதான் நடைபெறும். விஷ்வநாதன் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்து, குமரிப் பெண்ணின் உள்ளதிலே பாடலை, கொடுக்க வேண்டும் என்று பேசினார் என்று வீரமணி சித்தப்பா சொல்வார். அதனால்தான் எம்.ஜி.ஆர் அந்த பாடலை கொடுத்தார். எல்லாரும் டி.எம்.எஸ் பாடி கேட்டதால், தயாரிப்பாளரும், இவருக்கு பதிலாக டி.எம்.எஸ் பாடலாமா? என்று கேட்டார். இது விஷ்வநாதன் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. விஷ்வநாதன் அவர்களால் வீரமணி சித்தப்பா இல்லாமல் இருக்க முடியாது. அவரது காரில்தான் வீரமணி சித்தப்பா எல்லா இடத்திற்கும் செல்வார். நானும் வீரமணி சித்தப்பா, அண்ணி, விஷ்வநாதன் அனைவரும் கச்சேரிக்கு செல்வோம். நாங்கள் வண்டியில், ஒன்றாக சென்ற அனுபவங்கள் பல உள்ளது. நல்ல குணங்கள் கொண்ட இசையமைப்பாளர் விஷ்வநாதன். தயாரிப்பாளர் வேண்டாம் என்று சொன்னதால், குமரி பெண்ணின் உள்ளத்திலே பாடலை டி.எம்.எஸ் பாடியே வெளியானது. இதை எப்படி சொல்வது என்று விஷ்வநாதன் மிகவும் வருத்தப்பட்டார்.
வீரமணி சித்தப்பாவை அழைத்து, நீங்கள் நன்றாகத்தான் பாடினீர்கள் ஆனால், தயாரிப்பாளுக்கு பிடிக்கவில்லை என்றார். அவருக்கு பல முறை சினிமாவில் பாட வாய்ப்பு தட்டிப்போயிருக்கிறது. அப்போது தான் பள்ளிகட்டு சபரிமலைக்கு பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. விஷ்வநாதன், இதை பற்றி சொல்லும் ;போது சொல்வார் ஐயப்பன் தனக்கு ஒரு பாடல் வேண்டும் என்று உன்னை தேர்வு செய்திருக்கிறார். சினிமாவில் நீ பாடி இருந்தாலும் இந்த புகழ் கிடைத்திருக்காது என்று சொல்வார். குமரி பெண்ணின் நெஞ்சத்திலே பாடலை பாட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தாலும், படத்தில் பாடல் வரும் என்று எம்.ஜி.ஆர் சொன்னார்.
அதுபோல படத்தில் முதல் வரிகள் வீரமணி சித்தப்பா குரலில்தான் வந்தது. வெளிநாட்டில் ஒரு படத்திற்கு பாடல் படபிடிப்பு எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விஷ்வநாதன் மற்றும் டி.எம்.எஸ்யிடம் எம்.ஜி.ஆர் கேட்டார். அப்போது விஷ்வநாதன் மற்றும் டி.எம்.எஸ் இருருக்கும் பல வாய்ப்புகள் இருந்ததால் அவர்கள் முடியாது என்று சொன்னார்கள். இதனால் கோவமடைந்த எம்.ஜி.ஆர் வேறு ஒரு இசையமைப்பாளரை புக் செய்தார். ஆனால் அவர் இசையமைத்த பாடல் பிடிக்கவில்லை என்பாதல், விஷ்வநாதன் அப்பாவிடம் பேசி, விஷ்வநாதன், டி.எம்.எஸ் இருவரையும் கிட்டதட்ட 3 நாட்கள் ஹவுஸ் அரஸ்ட் செய்து இசையமைக்கச் செய்தார்.அந்த 3 நாட்களில்,விஷ்வநாதன் இசைமையக்க காத்திருந்த மற்ற படத்தின் தயாரிப்பாளரிடம் எம்.ஜி.ஆர்-யே பேசினார்” என்று வீரமணி ராஜூ தெரிவித்துள்ளார்.