/indian-express-tamil/media/media_files/R6ZEnHOPjjGD0gZ2DPWe.jpg)
81வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
சிறந்த இயக்குநர் – மோஷன் பிக்சர் விருதை Oppenheimer திரைப்படத்திற்காக கிறிஸ்டோபர் நோலன் பெற்றார். சிறந்த ஆண் நடிகர் – மோஷன் பிக்சர் விருதை இதே படத்தில் நடித்த சில்லியன் மேர்பி பெற்றார் ( Cillian Murphy). சிறந்த துணை நடிகருக்கான விருதை இதே படத்திற்காக ராபர்ட் டவுனி ஜூனியர் ( Robert Downey Jr) பெற்றார். சிறந்த பின்னணி இசைக்கான விருதும் Oppenheimer திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/wp-content/uploads/2024/01/GDSXDByaQAAK21a.jpg)
கில்லர் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரைப்படத்தில் நடித்த லில்லி கிளாட்ஸ்டோன் ( Lily Gladstone) சிறந்த நடிகை – மோஷன் பிக்சர் விருதை பெற்றுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/wp-content/uploads/2024/01/GDSqbYaaMAAQYmJ.jpg)
/indian-express-tamil/media/post_attachments/wp-content/uploads/2024/01/GDSZ_xhbUAAMFJb.jpg)
சிறந்த நடிகை இசை அல்லது காமெடி விருது எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது. இவர் நடித்த Poor Things-க்கு இந்த விருதை பெற்றார். சிறந்த வெளிநாட்டுப் படம் Anatomy of a Fall தேர்வு செய்யப்பட்டது. சிறந்த திரைக்கதை Anatomy of a Fall (Justine Triet, Arthur Harari) வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகை- மோஷன் பிக்சர் விருதை: Da’Vine Joy Randolph பெற்றார். இவர் நடித்த The Holdovers திரைப்படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us