scorecardresearch

ஓணம் கொண்டாடிய நடிகர்- நடிகைகள்: சிம்பு ஹீரோயின் செம்ம மாஸ் ஆக்‌ஷன்

கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் ‘அத்தப் பூக்கோலம்’ போட்டு, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, மகிழ்வுடன் திருவோணத்தை கொண்டாடுகின்றனர்.

Onam 2020 wishes
ஓணம் வாழ்த்துகள்

Onam Wishes by Celebrities: மலையாள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளத்தில் மட்டுமின்றி, தமிழக வாழ் கேரளா மக்களாலும் விமர்சையாக கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை, பத்து நாட்கள் கொண்டாடப்படும். ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோண திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்படுகிறது. மிகவும் விசேஷமாக கடைசி நாளான திருவோணத்தன்று, தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னரை வரவேற்க, கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் ‘அத்தப் பூக்கோலம்’ போட்டு, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, மகிழ்வுடன் திருவோணத்தை கொண்டாடுகின்றனர்.

இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், மாநாடு படத்தின் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு சேலை அணிந்து மலர் கோலம் போட்டுள்ளார். அதோடு “மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளவும், ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்தவும் ஓணம் கொண்டாடப்படுவதாக எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தன்னலமற்ற கவனிப்பைக் கொடுத்து, இடைவிடாது உழைத்து, எண்ணற்ற கோவிட் நோயாளிகள் ஓணம் கொண்டாட வீட்டிற்கு வந்ததற்கு காரணமாக இருந்த செவிலியர்களுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Happy Onam ????????????????☘️

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

“ஒவ்வொரு ஆண்டும், ஓணத்தின் போது நான் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பேன், ஆனால் இந்த நேரத்தில், எனது குடும்பத்தினருடன் பண்டிகையை வீட்டிலேயே கழிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் கொண்டாட நேரம் கிடைத்ததில் மகிழ்ச்சி” என நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லாலின் ஓணம் வாழ்த்துகள்.

நிவின் பாலியின் ஓணம் வாழ்த்து செய்தி.

ரசிகர்களுக்கு பிரியாமணியின் ஓணம் வாழ்த்துகள்.

மஞ்சிமா மோகனின் வாழ்த்து செய்தி.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Onam 2020 wishes celebrities onam wishes kalyani priyadharshan anupama