/indian-express-tamil/media/media_files/2025/09/20/screenshot-2025-09-20-162412-2025-09-20-16-24-28.jpg)
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது ஒரு பிரம்மாண்டம் தான் சிவாஜி கணேசன். தன்னுடைய நவரச நடிப்பால் அனைவரையும் தன்பால் ஈர்க்கும் அசாத்திய கலைஞன் என்றால் அது சிவாஜி தான். புராணக் கதைகள் முதல் புதுக்கதைகள் வரை சிவாஜி தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் மக்களின் மத்தியில் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவில் உள்ள நயாகரா மாநகரத்தில் ஒருநாள் மேயராக பணியாற்றியது பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். 1962-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த கலாச்சர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அப்போதிருந்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அழைத்திருந்தாராம்.
அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று சிவாஜியும் அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்த விழாவுக்கு இந்தியாவின் கலைத் தூதராக வந்திருந்த சிவாஜி கணேசனை பெருமைப்படுத்தும் விதமாக அவரை நியூயார்க்கில் உள்ள நயாகரா சிட்டியின் ஒருநாள் மேயராக அறிவித்தது மட்டுமின்றி, அவரது கையில் அந்த மாநகரத்தின் தங்க சாவியையும் கொடுத்து கெளரவித்துள்ளார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி.
இந்த ஒரு நாள் மேயர் என்கிற பெருமையை அடைந்த மற்றொரு இந்தியர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். அவருக்கு அடுத்தபடியாக இத்தகைய கெளரவமிக்க பதவி சிவாஜிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு நாள் மேயராக பணியாற்றிவிட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய சிவாஜி கணேசனை வரவேற்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே விமான நிலையத்துக்கு ரசிகர் படையோடு சென்றாராம்.
இதை பற்றி மருது மோகன் அவர்கள் ஒரு நேர்காணலில் பேசுகையில், "நான் ஒரு முறை சிவாஜி அவர்கள் ஒன் டே மேயராக இருந்த அந்த அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது அங்கு சென்று அந்த டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் நான் கேட்டவுடன், அப்படி யாரும் அங்கு ஒன் டே மேயராக இருந்ததே இல்லை என்று கூறினார்கள்.
நான் உடனே, சிவாஜி அவர்கள் ஜான் எஃப் கென்னடியால் அழைக்கப்பட்டவர் என்று கூறினேன். உடனே அவர்கள் டேட்டா செக் செய்து இவரா என்று கேட்டார்கள். நான் ஆமாம் என்று கூறினேன், அதற்க்கு முன்பு அங்கு ஒன் டே மேயராக இருந்தவர் ஜவாஹர்லால் நேரு தான்." என்று பகிர்ந்துகொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.