எந்திரன் 2.ஓ படத்தில் இரண்டு பாடல்கள் தானாம்?

படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கும் விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

சமீபகாலமாக இரண்டு மணி நேரத்தைத் தாண்டும் படங்களை ரசிகர்கள் அவ்வளவாக ரசிப்பதில்லை. பாடல்களையும் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் 2.ஓ படத்தில் இரண்டே பாடல்கள் தானாம். ரஜினியின் படங்களில் ஓப்பனிங் பாடல்கள் இருக்கும். அதை எந்திரனில் தான் உடைத்தார். இப்போது 2.ஓ வில் இரண்டே பாடல்கள் தான் என்றால் இந்த படத்திலும் தலைவருக்கு ஓப்பனிங் ஸாங் இருக்காதோ என்ற சந்தேகம் எழுகிறது.

படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கும் விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டிருக்கிறதாம். ஹாலிவுட்டுக்கு போட்டியிடற படத்துல பாட்டையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

ரெண்டு ஸாங்காக இருந்தாலும் ரஹ்மான் இசையில் பட்டையை கிளப்பும் என்கிறார்கள் 2.ஓ டீம்மில் உள்ளவர்கள்.

×Close
×Close