குட்டி ஸ்டோரி : இந்த வருடத்தின் மோட்டிவேஷனல் பாடல்!

Vijay Master Song Release Updates : இதற்கு முன் அனிருத் இசையில், விஜய் பாடிய ’செல்ஃபி புள்ள’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

By: Feb 15, 2020, 8:15:49 AM

Oru Kutti Kathai Release Latest Updates: பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 64-வது படமாக உருவாகும் இதனை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ’மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத். இதனை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் ’மாஸ்டர்’ திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், இன்று இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. ’ஒரு குட்டிக்கதை’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை விஜய்யே பாடியிருக்கிறார். இதற்கு முன் அனிருத் இசையில், விஜய் பாடிய ’செல்ஃபி புள்ள’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வகையில் இந்தப் பாடலைக் கேட்கவும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Live Blog
First single from Vijay's 'Master' Oru Kutti Kathai out now,  Vijay's Master's first single release - தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வெளியீடு சம்பந்தமான அனைத்து செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
19:02 (IST)14 Feb 2020
குட்டிக்கதைக்கு அடிமை

குட்டிக்கதை பாடலுக்கு அடிக்ட் ஆகிவிட்டதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.  

18:39 (IST)14 Feb 2020
பாடலில் இருந்து வெளியில் வர முடியவில்லை

ஒரு குட்டிக் கதை பாடலில் இருந்து வெளியில் வர முடியவில்லை என இந்த பயனர் தெரிவித்துள்ளார் 

18:22 (IST)14 Feb 2020
டிசைன் டிசைனா பிராப்ளம்

டிசைன் டிசைனா பிராப்ளம் வரும் என்ற வரியின் போது, வேலையில்லா திண்டாட்டம், ஊழல், கொரானா வைரஸ் தாக்குதல் போன்றவற்றை காட்டியுள்ளார்கள். 

18:00 (IST)14 Feb 2020
சிறந்த மோட்டிவேஷன் பாடல்

சிறந்த மோட்டிவேஷன் பாடல் என குட்டிக்கதையை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள் 

17:45 (IST)14 Feb 2020
எல்லா வயதினருக்கும் பிடிக்கும்

எல்லா வயதினருக்கும் பிடித்த பாடலாக குட்டிக்கதை இருக்கும் என இந்த பயனர் தெரிவித்துள்ளார். 

17:25 (IST)14 Feb 2020
அவர் இதய தளபதி - அருண்ராஜா காமராஜ்

குறிப்பாக இந்தப் பாடலை எழுதியதற்காக தான் மிகவும் பெருமை கொள்வதாக, பாடலாசிரியர் அருண்ராஜா குறிப்பிட்டுள்ளார்

17:12 (IST)14 Feb 2020
விஜய்யின் குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரியை ட்விட்டரில் வெளியிட்டார் ‘மாஸ்டர்’ விஜய் . பாடல் முழுவதுமே அனிமேஷனாக வரும் விஜய் கதை சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ளது. லிரிக் வீடியோவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் இப்பாடலை வெளியிட்டுள்ளார்கள். 

17:10 (IST)14 Feb 2020
‘நோ டென்ஷன் பேபி’

பாடலில் வரும் ‘நோ டென்ஷன் பேபி’ என்பதைக் குறிப்பிட்டு, மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாடலை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

17:03 (IST)14 Feb 2020
மாஸாக வெளியானது தளபதியின் குட்டிக்கதை

17:01 (IST)14 Feb 2020
ரெக்கார்டுகளை படைக்க தயாரா?

புதிய ரெக்கார்டுகளை படைக்க தயாராகி வரும் விஜய் ரசிகர்கள்

16:46 (IST)14 Feb 2020
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் குட்டிக்கதை

#OruKuttikathai எனும் ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

16:31 (IST)14 Feb 2020
எல்லாரும் ரெடியா?

எல்லாரும் ரெடியா இருங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல தளபதியோட குட்டிக்கதை வர போகுது 

16:20 (IST)14 Feb 2020
பாடலாசிரியர் யார் தெரியுமா?

ஒரு குட்டிக்கதை பாடலை, பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார்

15:57 (IST)14 Feb 2020
நேற்று அனிருத் வெளியிட்ட வீடியோ

ஒரு குட்டிக் கதை பாடலுக்கு ஒருநாள் இருக்கிறது என வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார் அனிருத். 

15:34 (IST)14 Feb 2020
இது வெறும் லிரிக் வீடியோ இல்ல

’ஒரு குட்டிக்கதை’ பாடல் லிரிக் வீடியோ என்பதை விட இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கும். இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன, என ஆன்லைன் திரைப்பட விமர்சகர் பிரஷாந்த் குறிப்பிட்டுள்ளார். 

15:11 (IST)14 Feb 2020
சலசலப்பை ஏற்படுத்திய ஐடி ரெய்டு

சில தினங்களுக்கு முன்னர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. நெய்வேலியில் படபிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜய், உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டார். இரண்டு நாட்களாக நடந்த சோதனையில், விஜய்யிடம் இருந்து வருமானத்துக்கு புறம்பாக எதுவும் கைப்பற்றபடவில்லை என அறிக்கை அளித்தது வருமானவரி நிர்வாகம். 

14:45 (IST)14 Feb 2020
தளபதி சொல்லும் குட்டிக்கதை யாருக்கு?

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் ஒரு குட்டிக்கதை பாடல் வெளியாகிறது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யே பாடியிருக்கிறார். அவர் சொல்லும் இந்தக் குட்டிக்கதை, காதலர்களுக்கா? சிங்கிள்ஸுக்கா இல்லை அரசியல்வாதிகளுக்கா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 

14:24 (IST)14 Feb 2020
தளபதியின் குட்டிக் கதை

காதலர் தினத்தை முன்னிட்டு ’மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. அது குறித்த அனைத்துத் தகவல்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 

Oru kutty kathai : மேடைகளில் விஜய் சொல்லும் ‘குட்டிக்கதை’ ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அதில் கொஞ்சம் அறிவுரையும், மீதம் அரசியலும் இருக்கும் அந்த வகையில் பாடலே குட்டிக்கதையாக வருவதால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். தவிர கடந்த வாரம் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டும், மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Web Title:Oru kutti kathai single live updates master thalapathy vijay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X