வீட்டுக்கு பின்னால் நதி; 'ஒரு தலை ராகம்' ஹீரோவா இவர்? அடையாளம் தெரியாமல் மாறிய ஷங்கர்: ஹோம்டூர் வைரல்

தனது வீட்டில், குடும்பத்தினரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும் சுவரில் இருந்து ஹோம் டூரை சங்கர் தொடங்கினார். அவரது தாய், தந்தை, மற்றும் மனைவியின் பெற்றோருடைய புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

தனது வீட்டில், குடும்பத்தினரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும் சுவரில் இருந்து ஹோம் டூரை சங்கர் தொடங்கினார். அவரது தாய், தந்தை, மற்றும் மனைவியின் பெற்றோருடைய புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

author-image
WebDesk
New Update
Shankar home tour

"ஒரு தலை ராகம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் ஷங்கரின், பிரத்தியேகமான ஹோம் டூர் வீடியோ Behindwoods TV யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் சுவாரசிய பகுதிகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். அதன்படி, கேரளாவில் உள்ள அவரது வீட்டின் ஹோம் டூரில் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

தனது வீட்டில், குடும்பத்தினரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும் சுவரில் இருந்து ஹோம் டூரை சங்கர் தொடங்கினார். அவரது தாய், தந்தை, மற்றும் மனைவியின் பெற்றோருடைய புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. தினமும் இந்தப் புகைப்படங்களை காண்பதன் மூலம் தனது நாளை தொடங்குவதாக சங்கர் தெரிவித்தார்.

அவரது வீடு அழகாகவும், போதுமான சூரிய ஒளியுடனும், அருமையான சுற்றுப்புறத்துடனும் இருப்பதாக சங்கர் விவரித்தார். அவரது மனைவி இண்டீரியர் டிசைனர் என்று சங்கர் குறிப்பிட்டார். மேலும், இங்கிலாந்தில் சுமார் 20 நடனப் பள்ளிகளையும் தனது மனைவி நிர்வகிப்பதாக சங்கர் குறிப்பிட்டார். தனது வீட்டை அடிக்கடி சீரமைக்கும் பணியை, தன்னுடைய மனைவி மேற்கொள்வதாக சங்கர் கூறினார்.

எல்லோரையும் போல் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழவே தான் விரும்புவதாக சங்கர் தெரிவித்தார். அவரது வீட்டில் முதலில் மூன்று படுக்கையறைகள் இருந்ததாகவும், அதன் பின்னர், இரண்டு படுக்கையறைகள் மட்டுமே தேவை என்பதால், ஒரு சுவரை உடைத்து பெரிய இடமாக மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு ஹோம் தியேட்டரை அமைக்க திட்டமிட்ட நிலையில், அடிக்கடி பயணம் செய்வதாலும், அதனை பயன்படுத்தாமல் இருந்தால் ஏற்படும் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாகவும் அந்த திட்டத்தை கைவிட்டதாக சங்கர் கூறுகிறார்.

Advertisment
Advertisements

ஷங்கர் தனது சமையலறையைக் காண்பித்து, சமையல் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது சமைக்க கற்றுக் கொண்டதாகவும், மேலும் தனது மனைவியிடமிருந்தும் சமையல் கற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது குடியிருப்பில் இருந்து பார்த்தால், பெரியார் நதியின் அழகை ரசிக்கும்படி இருக்கிறது. எனினும், நீண்ட நேரம் நதியை பார்த்தபடி தனியாக அமர்ந்திருந்தால் தனக்கு மனச்சோர்வு ஏற்படும் என்று சங்கர் கூறுகிறார். இது போன்ற வீடு குறித்த பல்வேறு விஷயங்கள் மற்றும் தனது பெர்சனல் பக்கங்களை ஹோம் டூர் வீடியோவில் சங்கர் பகிர்ந்து கொண்டார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: