scorecardresearch

Oru Viral Puratchi : ஒரு விரல் புரட்சி ரிலீஸ் : துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்!

Oru Viral Puratchi : நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் ஒரு விரல் புரட்சி பாடலை இன்று மாலை 6.30 மணியளவில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. Oru Viral Puratchi : ஒரு விரல் புரட்சி பாடல் ரிலீஸ் : சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் […]

Oru Viral Puratchi, ஒரு விரல் புரட்சி
Oru Viral Puratchi, ஒரு விரல் புரட்சி

Oru Viral Puratchi : நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் ஒரு விரல் புரட்சி பாடலை இன்று மாலை 6.30 மணியளவில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.

Oru Viral Puratchi : ஒரு விரல் புரட்சி பாடல் ரிலீஸ் :

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘சிம்டாங்காரன்’ சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Simtaangaran : சிம்டாங்காரன் : பாட்டும் வெளியானது… அர்த்தமும் வெளியானது!!!

 இந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கான ‘ஒரு விரல் புரட்சி’ இன்று மாலை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

சன் நெக்ஸ்ட் என்ற செயலியில் சிம்டாங்காரன் போலவே ‘ஒரு விரல் புரட்சி’ பாடலையும் மாலை 5 மணிக்கு வெளியிட்டனர். ஆனால் 6 மணிக்கு யூடியூப் -ல் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் தாமதாக ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அக்டோபர் 2-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Oru viral puratchi single track from sarkar