Advertisment

இணையத்தை கலக்கும் 'ஒசரட்டும் பத்து தல' : சிம்புவுக்கு மற்றொரு ஹிட் பாடல் கொடுத்த ரஹ்மான்

சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் பத்து தல படத்தின் ஒசரட்டும் பத்து தல பாடல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A poster of Silambarasan in Pathu Thala

A poster of Silambarasan in Pathu Thala

சிம்பு, கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பத்து தல. என். கிருஷ்ணா இயக்கி உள்ள இப்படம் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Advertisment

குறிப்பாக 'ஒசரட்டும் பத்து தல' பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கி வருகிறது. ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்புவுக்கும் அவரது எதிரிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் பாடல் அதுவும் க்ளைமாக்ஸ் மோதல் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல் வரிகள் ஒரு போர் முழக்கம் போலும், பத்து தலை கொண்ட அரக்கன் குறித்து வாழ்த்துவதாகும் உள்ளது. அதிலும் ரட்சகனும் இவன் தானே.. ராட்சசனும் இவர் தானே வரிகள் இதை வெளிபடுத்துகிறது. இப்பாடலுக்கு நாட்டு ராஜா துரை வரிகள் எழுதியுள்ளார். ரஹ்மான் இசையில் இப்பாடல் அப்படியே கதையின் பின்னணிக்கு பொருந்தி வந்திருக்கிறது.

சிம்புவின் மாநாடு அவருக்கு சிறந்த கம்பேக் கொடுத்தது. அடுத்து வெளியான வெந்து தணிந்தது காடு படமும் வெற்றி படமாக அமைந்தது. வெந்து தணிந்தது காடு படத்தையடுத்து சிம்பு- ரஹ்மான் காம்போ இதிலும் அசத்தலாக மோட்ச் ஆகி உள்ளது. படத்தின் அனைத்து பாடல்களும் படம் வெளியாகும் முன்பு ஹிட் அடித்துள்ளது. படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'மஃப்டி' படத்தின் ரீமேக் படம் பத்து தல என கூறப்பட்டாலும் படத்தின் திரைக்கதையில் பல்வேறு விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

A R Rahman Tamil Movie Silambarasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment