நடிகை திரிஷா ஆஸ்கர் விருது 2020 பற்றி தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், எமினெம் பில்லி எலிஷின் நடிப்பு தன்னை கண்கலங்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா ஆஸ்கர் விருது 2020 பற்றி தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், எமினெம் பில்லி எலிஷின் நடிப்பு தன்னை கண்கலங்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.
trisha, oscar award 2020, eminem billie eilish, திரிஷா, ஆஸ்கர் விருது 2020, எமினெம் பில்லி எலிஷ்,
நடிகை திரிஷா ஆஸ்கர் விருது 2020 பற்றி தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், எமினெம் பில்லி எலிஷின் நடிப்பு தன்னை கண்கலங்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.
Advertisment
92-வது ஆஸ்கார் விருதுகள் ஹாலிவுட்டின் ஹைலேண்ட் மையமான ஹாலிவுட் டோல்பை தியேட்டரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள், விருந்தினர்கள் என அனைவரும் விதவிதமான ஃபேஷன் உடைகளில் வலம் வந்தனர். அதே நேரத்தில் உலகம் முழுவதும் ஆஸ்கர் விருதுகள் 2020 அறிவிப்பை தொலைக்காட்சிகள் வழியாக பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
Advertisment
Advertisements
ஆஸ்கர் விருதுகள் பற்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா தனது இன்ஸ்டாகிரா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். “இந்த ஆண்டு யார் விருதை வெல்வார் என்று என்னால் யோசிக்க முடியவில்லை. அதற்காக பரிந்துரைக்கப்பட்ட படம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தாழ்மையான பேச்சுகள்... எமினெம் மற்றும் பில்லி எலிஷ்... என்ன ஒரு காட்சி. கண்களில் கொஞ்சம் கண்ணீருடன் நான் சினிமாவை இன்னும் கொஞ்சம் நேசிக்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சியில் கோபி பிரையன்ட்டை க கௌரவிப்பது குறித்து பில்லி எலிஷ் பேசுகையில், ஒத்திகையின்போது தனக்கு நடுக்கம் ஏற்படும் என்று கூறினார். 18 வயதான பில்லி எலிஷ் ஆஸ்கர் விருதின் சிவப்பு கம்பளத்தில் ஒரு ராக் ஸ்டார் போல தோண்றினார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா பிஸியாக உள்ளார். இந்தப் படத்தில் திரிஷா குந்தவை நாச்சியார் வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.