scorecardresearch

இந்திய நேரப்படி ஆஸ்கர் விருது விழா எப்போது தெரியுமா?

இந்திய நேரப்படி நாளை (25.02.2019) அதிகாலை இவ்விழா துவங்கும்.

Oscar 2019

திரைப்படத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது ‘ஆஸ்கர் விருது’. உலகம் முழுவதும் இருக்கும் மொத்த சினிமா ரசிகர்களும் இதனை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இந்தாண்டுக்கான 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் பிப்ரவரி 24ம் தேதியான இன்று நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி நாளை (25.02.2019) அதிகாலை இவ்விழா துவங்கும். இதில் ’தி ஃபேவரைட், ரோமா’ ஆகிய ஹாலிவுட் படங்கள் அதிகபட்சமாக தலா 10 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

அதோடு கோவையை சேர்ந்த முருகானந்தம் ஏழை பெண்களுக்காக மலிவுவிலை நாப்கின் தயாரித்து புகழ்பெற்றது குறித்து எடுக்கப்பட்டுள்ள, ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற குறும்படம் ஆவண குறும்பட விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Oscar award function date and time in india

Best of Express