ஆஸ்கர் 2019 : வெற்றி வாகை சூடியவர்கள் பட்டியல் இதோ !

Oscar Awards 2019 : List of winners and movies : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. Countless stories, one night. The #Oscars, tonight at 8e|5p. pic.twitter.com/piYFkDAQMM — The Academy (@TheAcademy)…

By: Updated: February 25, 2019, 10:28:55 AM

Oscar Awards 2019 : List of winners and movies : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

வெற்றி வாகை சூடியவர்கள் பட்டியல் :

சிறந்த துணை நடிகை :

If Beale Street Could Talk படத்தில் நடித்த ரெஜினா கிங் என்பவருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகர்

கிரீன் புக் படத்தில் நடித்த மாஹர்ஷெலா அலி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒப்பனை

சிறந்த ஒப்பனைக்கான விருது வைஸ் (Vice) படத்திற்கு வழங்கப்பட்டது

சிறந்த ஆவணப்படம்

சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை ஃப்ரீ சோலோ (Free Solo) என்ற படத்திற்கு வழங்கப்பட்டது

சிறந்த வடிவமைப்பு

சிறந்த ஆடை வடிவமைப்பினை ருத் இ கார்டர் என்பவர் பிளாக் பாந்தர் படத்திற்காக பெற்றுள்ளார்.


சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

தயாரிப்பு வடிவமைப்பு ஹன்னா பீச்லர் மற்றும் ஜெய் ஹார்ட் ஆகியோருக்கு பிளாக் பாந்தர் படத்திற்கான அளிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒளிபதிவு

ரோமா படத்தின் ஒளிப்பதிவிற்காக ஆஸ்கர் விருது அல்போன்சா குவாரன் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆவண குறும்படம்

கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்  அவர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ப்ரீயட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் என்ற படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடல்

ஏ ஸ்டார் இஸ் பார்ன் (A star is born) என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ஷாலோ பாடலிற்காக லேடி காகா, மார்க் ரான்சன், அந்தோனி ரொசாமெண்டோ, ஆண்ட்ரூ வையாட் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த தழுவல் திரைக்கதை

பிளாக் கிளான்ஸ்மேன் படத்திற்காக சார்லி வாச்சேல், டேவிட் ராபிநோவிட்ஸ், கெவின் வில்மோட், ஸ்பைக் லீ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைக்கதை

க்ரீன் புக் – படத்திற்கான நிக் வால்லேலொங்கா, பிரியான் கியூரி மற்றும் பீட்டர் ஃபாரெலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்

ஸ்கின் படத்திற்காக கை நேட்டிவ், ஜேமி ரே நியூமேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த விஷூவல் எஃபெக்ட்

ஃப்ர்ஸ் மேன் படத்திற்காக இயான் ஹண்டர் டிரிஸ்டன் மைல்ஸ், பால் லாம்பெர்ட், ஜே.டி.ஸ்ச்வாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படம்

பாவோ படத்திற்காக டோமி ஷீ, பெக்கி நீமேன் காப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன்

ஸ்பைடர் மேன் இன் டூ தி ஸ்பைடர் வெர்ஸ் படத்திற்காக பாப் பெர்சிசெட்டி, பீட்டர் ராம்சே, ராட்னி ரோத்மேன், பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த வெளிநாட்டுப் படம்

இந்த விருதினை ரோமா படம் பெற்றுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருதும் இப்படத்தை இயக்கிய அல்போன்சா குவாரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது தி ஃபேவரைட் படத்தில் நடித்த ஒலிவியா கால்மனிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்

போஹிமியான் ராஃப்சோடி படத்தில் நடித்த ரமி மாலிக்கிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த படத்தொகுப்பு

போஹிமியான் ராப்சோடி படத்திற்காக ஜான் ஓட்மேனுக்கு வழங்கப்பட்டது. இந்த படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஒலிக்கலவை

சிறந்த ஒலிக்கலவைக்கான ஆஸ்கர் விருதினை போஹிமியான் ராப்சோடி படத்திற்காக பால் மேஸ்ஸி, டிம் கேவஜின், ஜான் கேசலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒலித்தொகுப்பு

போஹிமியான் ராப்சோடி படத்திற்காக ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணி இசை

பிளாக் பாந்தர் படத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

Oscar Awards 2019 : சிறந்த படம்

க்ரீன் புக் படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Oscar awards 2019 list of winners and movies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X