கல்லி பாய் - ரன்வீர் சிங்கின் பிளாக்பஸ்டரை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யும் இந்தியா
ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் கல்லி பாய் திரைப்படம் சிறந்த சர்வதேச படம் என்ற பிரிவுக்கு, இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் கல்லி பாய் திரைப்படம் சிறந்த சர்வதேச படம் என்ற பிரிவுக்கு, இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
oscar2020 three tamil films shortlisted including oththa seruppu - ஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்!
ரன்வீர் சிங் நடிப்பில் உருவான கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Advertisment
ஆஸ்கர் விருதுக்கு பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகிய மொழிகளில் இருந்து 28 படங்கள் இறுதி செய்யப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியானது.
கோலிவுட் படங்கள்:
Advertisment
Advertisements
ஒத்த செருப்பு சைஸ் 7
சூப்பர் டீலக்ஸ்
வட சென்னை
கடந்த வெள்ளியன்று வெளியான ஒத்த செருப்பு திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பார்த்திபன் இயக்கி, ஒற்றை நபராக நடித்திருக்கும் இப்படத்துக்கு விமர்சன ரீதியாக அதிக ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்புப் பெற்றது.
வெற்றிமாறன் - தனுஷ் காம்போவில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வட சென்னை. தனுஷின் நடிப்பு, மேக்கிங் என ரசிகர்களை இப்படம் மொத்தமாக கட்டிப்போட்டது.
இந்நிலையில், ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் கல்லி பாய் திரைப்படம் சிறந்த சர்வதேச படம் என்ற பிரிவுக்கு, இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
28 படங்கள் பட்டியலில், கல்லி பாய் பரிந்துரை செய்யலாம் என்று தேர்வுக்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.