சினிமாத் துறையின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்கள், படைப்புகள் அடையாளம் காணப்பட்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன.
90வது ஆஸ்கார் விருதுகள், கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி தியேட்டரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த எதிர்பார்ர்புகளுக்கு மத்தியில், சிறந்த படைப்பாளிகள் விருதுகளை பெற்று வருகின்றன. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் என மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. வகையில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் மற்றும் விருதுகளை சொந்த மாக்கிய வெற்றியாளர்கள் பட்டியல் இதோ...
1. சிறந்த திரைக்கதை-”கெட் அவுட் ” (ஜார்டன் பீலே)
2. சிறந்த அனிமேஷன் குறும்படம் - ”டியர் பேஸ்கட் பால்” (க்ளன் கீனி, கோப் ப்ரையண்ட்)
3. சிறந்த திரைக்கதை தழுவல் – ”கால் மீ பை யுவர் நேம்” ( ஜேம்ஸ் ஐவரி)
4. சிறந்த ஆவணக் குறும்படம்: ”ஹெவன் ஈஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405” (ஃப்ரான்க் ஸ்டீவல்)
5. சிறந்த அனிமேஷன் படம்: “கோகோ” ( லீ அன்க்ரீச், டார்லா கே.ஆண்ட்ரசன்)
6.சிறந்த படத்தொகுப்பு: “டன்கிர்க்” (லீ ஸ்மித்)
7. சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிங்: “டார்க்கேஸ்ட் ஹவர்” (கசூஹிரோ டூஸ்கி, டேவிட் மலின்னோஸ்கி, லக்கி சிபிக் )
8. சிறந்த ஆடை வடிவமைப்பு: “பேண்டம் திரெட்” ( மார்க் பிரிட்ஜஸ்)
9. சிறந்த புரொடக்ஷன் டிசைன்: “தி ஷேப் ஆப் வாட்டர்” ( நாட்டன் ரோமிட்டாலி , நெல்சன் ஃபேரிரா)
10. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்: “பிளேட் ரன்னர் 2049” ( ஜான் நெல்சன்,ம் பால் லேம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். ஹூக்கர்,கேர்ட் நேசர்)
11. சிறந்த திரைப்படம் - ”தி ஷேப் ஆப் வாட்டர்”
12. சிறந்த நடிகை - பிரான்சிஸ் மெக்டார்மண்ட் ( ”த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி”)
13. சிறந்த நடிகர் - கேரி ஓல்டுமேன் ( ”டார்க்ஸ்ட் ஹவர்”)
14. சிறந்த பாடல் - ரிமெம்பர் மீ (” கோகோ”)
15. சிறந்த இயக்குநர்- கில்லெர்மோ டெல்டோரோ (” தி ஷேப் ஆப் வாட்டர்”
16. சிறந்த இசைக்கான திரைப்படம் - ”தி ஷேப் ஆப் வாட்டர் ” (அலெக்ஸாண்டர்)
17. சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டிக்கின்ஸ் ( ”பிளேடு ரன்னர் 2049”)
குறிப்பு: இதுவரை 14 முறை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு முதன் முறையாக விருட்க்ஹை பெறுகிறார் ரோஜர் டிக்கின்ஸ்.
18. சிறந்த குறும்படம்- ”தி சைலன்ட் சைல்ட்” (கிறிஸ் ஓவர்டன்)
19. சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜேனி (”ஐ டான்யா”)
20. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - ”ஏ ஃபென்டாஸ்டிக் உமன்” (செபாஸ்டியன் லீலியோ)
21. சிறந்த கலை இயக்குநர்- பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ (” ஷேப் ஆப் வாட்டர்’)
22. சிறந்த ஒலித் தொகுப்புக்கான திரைப்படம் - ”டன்கர்க்”
23. சிறந்த ஒலி கலவைக்கான திரைப்படம் - ”டன்கர்க்”
24. சிறந்த முழுநீள ஆவணப்படம் - ”இக்காரஸ்”
இன்றைய தினம், ஆஸ்கார் வழங்கப்படுவதையொட்டி, ட்விட்டரில் #Oscars90 #AFantasticWoman #Oscar2018 #ThatsHowItsDone AllisonJanney Costume Design Sam Rockwell Best Supporting Actress #MondayMotivation ஹாஷ்டேக்குகள் ரெண்ட் அடித்து வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.