Oscars 2023 complete list of winners: அகாடமி விருது எனப்படும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (மார்ச் 13) நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் 'The Elephant Whisperers' ஆவணப்படம் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. சிறந்த ஆவண குறும்படம் (Best Documentary Short) பிரிவில் 'The Elephant Whisperers' விருது வென்றுள்ளது. தாயிடம் இருந்து பிரிந்து தவிக்கும் குட்டியானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் யதார்த்த வாழக்கையை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மூன்று பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டன.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஆவணப் படப் பிரிவில் (Best Documentary Feature film) ஷௌனக் சென்னின் ஆல் தட் ப்ரீத்ஸ் (All That Breathes), சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆகியவைகள் பரிந்துரை செய்யப்பட்டன. ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் மொழிகளைக் கடந்து வெற்றி பெற்றது. இப்படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். முன்னதாக ‘நாட்டு நாட்டு’ பாடல் இதே பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்றது. 'The Elephant Whisperers' ஆவணப்படத்திற்கான விருதை இயக்குநர் கார்த்திகியும், தயாரிப்பாளரும் பெற்றுக் கொண்டனர். அதேபோல், நாட்டு நாட்டு பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றார்.
இதைத் தவிர சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது 'Everything Everywhere All At Once' திரைப்படம் தட்டிச் சென்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் சிறந்த எடிட்டிங் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் குவித்துள்ளது.
ஆஸ்கர் 2023 வெற்றியாளர்கள் பட்டியல் குறித்து இங்கு பார்ப்போம்.
சிறந்த படத்தொகுப்பு
இனிஷெரின் பன்ஷீஸ்
எல்விஸ்
Everything Everywhere All At Once - வெற்றி
தார்
டாப் கன்: மேவரிக்
சிறந்த ஒரிஜினல் பாடல்
"அப்லாஸ்" (Tell It Like a Woman)
"என் கையைப் பிடி" (டாப் கன்: மேவரிக்)
"லிஃப்ட் மீ அப்" (பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்)
“நாட்டு நாடு” (RRR) - வெற்றி
"திஸ் இஸ் லைவ்" (Everything Everywhere All At Once)
சிறந்த ஒலிப்பதிவு
All Quiet on the Western Front
Avatar: The Way of Water
The Batman
Elvis
Top Gun: Maverick - வெற்றி
சிறந்த தழுவல் திரைக்கதை
All Quiet on the Western Front
Glass Onion: A Knives Out Mystery
Living
Top Gun: Maverick
Women Talking - வெற்றி
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை
The Banshees of Inisherin – Martin McDonagh
Everything Everywhere All at Once – Daniel Kwan and Daniel Schienert - வெற்றி
The Fabelmans – Steven Spielberg and Tony Kushner
Tár – Todd Field
Triangle of Sadness – Ruben Östlund
சிறந்த காட்சி அமைப்பு (Best Visual Effects)
All Quiet on the Western Front
Avatar: The Way of Water - வெற்றி
The Batman
Black Panther: Wakanda Forever
Top Gun: Maverick
Best Original Score
All Quiet on the Western Front - வெற்றி
Babylon
The Banshees of Inisherin
Everything Everywhere All at Once
The Fabelmans
சிறந்த ஆவணக் குறும்படம் (Best Documentary Short Film)
The Elephant Whisperers - வெற்றி
Haulout
How Do You Measure a Year?
The Martha Mitchell Effect
Stranger at the Gate
சிறந்த ஆடை வடிவமைப்பு Best Costume Design
Babylon
Black Panther: Wakanda Forever - வெற்றி
Elvis
Everything Everywhere All at Once
Mrs. Harris Goes to Paris
சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film)
All Quiet on the Western Front (Germany) - வெற்றி
Argentina, 1985 (Argentina)
Close (Belgium)
EO (Poland)
The Quiet Girl (Ireland)
சிறந்த ஆவண திரைப்படம் (Best Documentary Feature Film)
All That Breathes
All the Beauty and the Bloodshed
Fire of Love
A House Made of Splinters
Navalny - வெற்றி
7 ஆஸ்கர் விருது
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை "THE WHALE" திரைப்படத்திற்காக பிரண்டன் ஃப்ரேசர் பெற்றுக் கொண்டார். சிறந்த நடிகைக்கான விருது 'Everything Everywhere All At Once'படத்தில் நடித்த மிஷ்ஷெல் யோ-விற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் இவர் படைத்தார். இதேபோல் சிறந்த இயக்குனருக்கான விருதும் 'Everything Everywhere All At Once'படத்தை இயக்கிய டானியல் குவான் மற்றும் டானியல் ஸ்கினேர்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இத்திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகளை தட்டிச்சென்றது .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.