/indian-express-tamil/media/media_files/zYYmONz2QZgcrwduwqXa.jpg)
96-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திங்களன்று கோலாகமாக நடைபெற்று முடிந்தது. இதில் ஹாலிவுட் திரைப்படத்திற்கான விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில், 96-வது ஆஸ்கர் விழாவில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹைமர் றந்த படத்திற்கான விருதை வென்று புது வரலாறு படைத்தது.
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 10 அன்று நடைபெற்ற இந்த விழா, பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட மிகவும் கோலாகமான நிகழ்வாக இருந்தது. இந்த நிகழ்வில் ஓபன்ஹெய்மர் மிகப்பெரிய வெற்றியாளராக இருந்தது. மொத்தம் 7 விருதுகளை தட்டிச் சென்றது. ஓபன்ஹெய்மர் படம் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 7 விருதுகளை வென்றது.
கிறிஸ்டோபர் நோலனின் த்ரில்லர் படமான ஓப்பன்ஹைமர் இந்த விருது சீசனில் அனைத்து விழாக்களிலும் சிறந்த திரைப்படப் பிரிவில் முன்னணியில் இருந்தது. ஆஸ்கர் பந்தயத்தில் நுழைவதற்கு முன்பு கோல்டன் குளோப் விருதுகள், பிரிட்டிஷ் அகாடமி திரைப்படம் (பாஃப்டா) விருதுகள் மற்றும் விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருதுகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க:https://indianexpress.com/article/entertainment/hollywood/oscars-2024-oppenheimer-winner-best-picture-christopher-nolan-9198285/
சிறந்த படம் உள்பட ஓப்பன்ஹைமர் 12 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த இயக்குனர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த தழுவல் திரைக்கதை (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் முபி), துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), துணை நடிகை (எமிலி பிளண்ட்), ஒளிப்பதிவு (ஹாய்ட் வான் ஹொய்டெமா) ஆடை வடிவமைப்பு (Ellen Mirojnick), ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் (Luisa Abel), ஓரிஜினல் ஸ்கோர் (Ludwig Göransson), தயாரிப்பு வடிவமைப்பு (Ruth De Jong) ; செட் அலங்காரம்: Claire Kaufman), எடிட்டிங் (Jennifer Lame) மற்றும் Sound (Willie Burton , Richard King, Gary A. Rizzo மற்றும் Kevin O'Connell) ஆகிய பிரிவுகளுக்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.