Advertisment
Presenting Partner
Desktop GIF

ஓ.டி.டி யில் இந்த வாரம் எந்த படம் பார்கலாம்? தியேட்டரில் ரிலிசில் எது பெஸ்ட்?

இந்த வாரத்தில் ஓ.டி.டியில், தியேட்டரில் இந்த வாரம் வெளியான படங்கள், சீரில்ஸ் தொடர்பான தொகுப்பு இது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

இந்த வாரத்தில் ஓ.டி.டியில், தியேட்டரில் இந்த வாரம் வெளியான படங்கள், சீரில்ஸ் தொடர்பான தொகுப்பு இது. 
’நாகேந்திரன்ஸ் ஹனிமூன்’: ஹாட் ஸ்டார் 
சுராஜ் வெஞ்சாரமூட்டு நடிப்பில்  நிதின் பனிக்கர் இயக்கியுள்ள சீரிஸ் ’நாகேந்திரன்ஸ் ஹனிமூன்’. நாகேந்திரன், ஐந்து பெண்களை மோசடி செய்து திருமணம் செய்கிறார். இந்த உண்மை  அவரின் மனைவிகளுக்கு தெரிந்த பின் என்ன ஆகிறது என்பதே இந்த படத்தின் கதை. இது ஜூலை 19ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. 
தி அக்களி – ஆஹா ( தமிழ்) 
முகமது ஆசிஃப் ஹமீத் இயக்கிய படம் ” The akaali’. ப்ளாக் மேஜிக் சமந்தப்பட்ட கதைக்களத்தில் தயாராகியிருக்கிறது. 
ஆடு ஜீவிதம் – நெட்பிளிக்ஸ் 
ப்ரித்விராஜ் நடித்த படம், பிழைப்பு தேடி சவுதி செல்லும் நஜீப், அங்கு சந்திக்கும் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்ப எடுக்கும் முயற்சிகளே கதை .இது நெட்பிளிக்ஸில் 19 ஜூலை வெளியானது. 
குங்பூ பாண்டா 4 ( KUG FU PANDA 4): ஜியோ சினிமா
மைக் மிக்செல் இயக்கிய அனிமேஷன் படம் ‘ kung fu panda’வின் நான்காவது பாகம். போ என்ற பாண்டா கரடி இம்முறை வரும் சவால்கள் எப்படி சந்திக்கிறது என்பதே கதை. 
Find me falling (English): ப்ரைம் வீடியோ
ஸ்டெலென்னா கிளிரிஸ் இயக்கியிருக்கும் படம் இது. தனது ஆல்பம் தோற்ற பிறகு ராக்ஸ்டார் ஜான் ஆல்மேன் ஒரு தனி தீவுக்கு செல்கிறார். அதன் பிறகு நடைக்கும் விஷயங்களே இந்த படம் . 
மை ஸ்பை: தி எட்டர்னெல் சிட்டி – நெட்பிக்ஸ் 
இந்த படம் 2020ல் வெளியான  ‘மை ஸ்பை’ படத்தில் அடுத்த பாதி இது. இந்த படம் ஜூலை 18ம் தேதி வெளியானது. 
Bahishkarana –ஜீ5 
இது ஒரு சீரிஸ் ஆகும். இதில் அஞ்சலி நடித்திருக்கிறார். கிராம தலைவரை எதிர்த்து போராடும் பெண்ணின் கதை இது. இது ஜீ5-ல் ஜூலை 19ம் தேதி வெளியானது . 
ஐ.எஸ்.எஸ் : ஜியோ சினிமா
பூமிக்கு மேலே உள்ள சர்வதேச ஸ்பெஸ் ஸ்டேஷனில் கண்டுபிடிக்கப்படும் ஒரு பிரச்சனை, அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளே படத்தின் கதை. இது ஜியோ சினிமாவில், ஜூலை 19ம் தேதி வெளியானது. 
தியேட்டரில் வெளியான படம் 
திமில் ( தமிழ்) 
மகேஷ் நடித்துள்ள படம் ‘திமில்’. இது இளைஞரின் வாழ்வில் வரும் சிக்கலை மையப்படுத்திய படம். 
Accident or conspiracy : Godhra( ஆங்கிலம்) 
ஷிவாக்ஷ் இயக்கியிருக்கும் படம் ‘ Accident or conspiracy : Godhra’. குஜராத் கலவரத்தில் பெற்றோரை பறிகொடுத்த மாணவன், அதே கலவரத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றை தயார் செய்கிறான். அதற்கான பயணத்தின் போது அதை தெரிந்துகொள்வதே கதை. இது கடந்த ஜூலை 19ம் தேதி வெளியாகி உள்ளது. 
பாட் நியூஸ் ( இந்தி) 
2009 வெளியான குட் நியூஸ் படத்தின் இரண்டாம் பாகம் இது. விக்கி கெளஷன், த்ரிமதி டிம்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது கடந்த ஜூலை 19ம் தேதி வெளியானது.  

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment