Advertisment

சூரரைப் போற்று முதல் அந்தகாரம் வரை: ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி படங்கள்!

நவம்பர் 10-ஆம் தேதி தியேட்டர்களை திறக்க திட்டமிட்டிருந்தாலும், தீபாவளி ஸ்பெஷலாக பெரிய படங்கள் எதுவும் வெளியாவதில்லை.

author-image
WebDesk
New Update
Diwali Release Movies, OTT Release movies for diwali

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள்!

தீபாவளி சீசன் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் காலம். ஏனெனில் இது மிகப்பெரிய பட ரிலீஸ்களை கொண்டிருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, தீபாவளிக்கு வெளியான விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும், இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, விஜய் - விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் தீபாவளிக்கு வெளியாவதில்லை. நவம்பர் 10-ஆம் தேதி தியேட்டர்களை திறக்க திட்டமிட்டிருந்தாலும், தீபாவளி ஸ்பெஷலாக பெரிய படங்கள் எதுவும் வெளியாவதில்லை.

Advertisment

யார் சொன்னா பேங்கில் கடன் வாங்குவது கஷ்டம்? கம்மியான வட்டி வீடு தேடி வந்து கடன் தரும் வங்கி இதுவே!

ஆனால் ஓ.டி.டி இயங்குதளங்களில், பல தமிழ் படங்கள் மற்றும் வலைத் தொடர்கள் வெளியாக உள்ளன. அதன் தேதிகள் மற்றும் வெளியாகும் தளங்களின் பட்டியல் இங்கே.

சூரரைப் போற்று: நடிகர் சூர்யாவின் மிகப்பெரிய வெளியீடான சூரரைப் போற்று படத்தை, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி, அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்ததுள்ளார். இந்தியாவின் முதல் குறைந்த கட்டண விமான சேவையைத் தொடங்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

மூக்குத்தி அம்மன்: எல்.கே.ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். இதன் ப்ரோமோக்கள் ஒரு வேடிக்கையான நகைச்சுவைக்கு உறுதியளிக்கின்றன. இந்தப் படம் நவம்பர் 14-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

மிஸ் இந்தியா: நரேந்திர நாத் இயக்கியுள்ள இந்தப் பாடத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்பட வெளியாகிறது.  மகாநடி மற்றும் பென்குயின் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் முன்னணி கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்திருக்கும் மூன்றாவது படம் இது. நவம்பர் 4-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ்ஸில் மிஸ் இந்தியா வெளியாகிறது.

அந்தகாரம்: அட்லீ தயாரித்திருக்கும் இந்தப் படத்தை விக்னராஜன் இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இது, அதன் டிரெய்லர் மூலம் ஒரு பரபரப்பை உருவாக்கியது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். படம் நவம்பர் 24-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ்ஸில் வெளியாகிறது.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு: ராஜா ராஜமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷராஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவம்பரில் வெளியாவதாக சொல்லப்படும் இந்தப் படத்தின் தேதி மற்றும் தளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த படங்களைத் தவிர, மேலும் நான்கு தமிழ் தொடர்கள் விரைவில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னாவின் க்ரைம் த்ரில்லர் ’நவம்பர் ஸ்டோரி’, சத்யராஜின் நகைச்சுவை தொடர், ’மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்’, காஜல் அகர்வால் மற்றும் வைபவின் ’லைவ் டெலிகாஸ்ட்’, மற்றும் ஜெய் மற்றும் வாணி போஜனின் ’டிரிபிள்ஸ்’ ஆகிய 4 தொடர்களின் வெளியீட்டு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Nayanthara Keerthy Suresh Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment