/indian-express-tamil/media/media_files/2025/09/16/movie-2025-09-16-18-21-41.jpg)
அனல் பறக்கும் விவாதம்... மிஸ் பண்ணக் கூடாத டாப் கோர்ட் ரூம் படங்கள்; இந்த ஓ.டி.டி-யில் பாருங்க!
வெள்ளித்திரை போன்று ஓடிடி-களிலும் எந்த வாரம் எந்த படம் வரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அப்படி ஓடிடி தளங்களில் பார்க்கக் கூடிய நீதிமன்றம் தொடர்பான 8 படங்கள் குறித்து பார்க்கலாம்.
முல்க்
கடந்த 2018-ஆம் ஆண்டு அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘முல்க்’. இந்த படத்தில் தாப்சி, ரிஷி கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர். முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பயங்கரவாத வழக்கில் சிக்குகிறார். இதனால் அவர்கள் குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனையை கதைக்களமாக கொண்டுள்ளது இப்படம். இந்த படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஜாலி எல்.எல்.பி
இப்படம் 1999-ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கின் உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பாதிக்கப்பட்ட நபருக்காக ஜாலி போராட நினைக்கிறார். ஆனால், அவருக்கு எதிராக இருப்பவர்கள் முன்னணி வழக்கறிஞரை நியமித்து வழக்கை நடத்துகின்றனர். இறுதியில் ஜாலி வழக்கில் ஜெய்த்தாரா? இல்லையா? என்பதே கதை. இப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
பிங்க்
அனுருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிங்க்’. இந்த படத்தில் அமிதாப் பச்சன், தாப்சி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல்வாதியின் மருமகன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய முயற்சிக்கும் தாப்சி மற்றும் அவரது நண்பர்கள் குறித்து இந்த கதை சொல்கிறது. இவர்களுகு வக்கில் அமிதாப் பச்சன் எப்படி உதவுகிறார். இறுதியில் தாப்சி மற்றும் அவரது நண்பர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் கதை. இந்த படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
ஓ மை காட்
இயக்குநர் உமேஷ் சுக்லா இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஓ மை காட்’ . இந்த படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, அக்ஷய் குமார் உட்பட பலர் நடித்திருந்தனர். நிலநடுக்கம் தனது வாழ்க்கையை புரட்டிப்போடும் நிலையில் ஒரு கடை ஊழியர் கடவுள் மீது வழக்கு தொடர்கிறார். இதை மையமாக வைத்தே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.
கிரிமினல் ஜஸ்டிஸ்
தான் செய்யாத குற்றதிற்காக ஆதித்யா என்ற இளைஞர் குற்றம்சாட்டப்படுகிறார். இதை மையமாக வைத்தே ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.
கேசரி 2
ஜாலியன்வாலாபாக் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படமாகும். இந்த படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
மாம்லா லீகல் ஹை
பட்பர் கஞ்ச் மாவட்டத்தில் ஏற்படும் குழப்பமே இப்படத்தின் கதைக்களமாகும். இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
செக்சன் 375
ஜூனியர் ஆடை வடிவமைப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரோஹன் குரானா என்ற திரைப்படத் தயாரிப்பாளரை அடிப்படையாக கொண்ட படம். இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us