OTT: வரிசை கட்டும் ஆக்ஷன், கிரைம், த்ரில்லர் படங்கள்... அமேசான் பிரைமில் மிஸ் பண்ணாதீங்க!

அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வரிசை கட்டி ரிலீஸான ஆக்‌ஷன், த்ரில்லர் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வரிசை கட்டி ரிலீஸான ஆக்‌ஷன், த்ரில்லர் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
knife

OTT: வரிசை கட்டும் ஆக்ஷன், கிரைம், த்ரில்லர் படங்கள்... அமேசான் பிரைமில் மிஸ் பண்ணாதீங்க!

ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி தளங்களில் படங்கள் வரிசைக்கட்டி வெளியிடப்படுகின்றன. இந்த படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஆக்‌ஷன் , கிரைம் த்ரில்லர் படங்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆக்‌ஷன் , த்ரில்லர் ஜானரில் வெளியான திரைப்படம் ‘ரிலே' ( Relay). இந்த படம் கடந்த 16-ஆம் தேதி  அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்க முடியும்.

கிரைம் டாக்குமெண்டரியாக வெளியான திரைப்படம் ‘சீக்ரெட் மால் அப்பார்ட்மெண்ட்’ (Secret Mall Apartment). இப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் கடந்த 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். 

2024-ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் ’விட்ச் போர்ட்’ (Witchboard). திகில் நிறைந்த இந்த பேய் படம் கடந்த 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். 

Advertisment
Advertisements

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் வெப் தொடர் ‘ஜென் வி’ (Gen V).  அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன், காமெடி, ஆக்ஷன், சூப்பர் ஹீரோ கதைக்களத்தை கொண்ட இந்த வெப் தொடரின் இரண்டாவது சீசன்  கடந்த 17-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. இத்தொடரை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். 

த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படமான ‘ட்ரஸ்ட்’ (Trust) இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், இப்படம் நேற்று (செப் 19) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.  இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். 

சூப்பர் ஹீரோ, அட்வென்ச்சர், ஆக்ஷன், ஃபேண்டஸி, அனிமேஷன் திரைப்படமான ‘ஆஸ்டெக் பேட்மேன்: கிளாஸ் ஆஃப் எம்பையர்’ (Aztec Batman: Clash of Empires) திரைப்படம் நேற்று (செப் 19) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். 

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஈடன்’ (Eden). சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நேற்று (செப் 19) அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். 

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளிவந்த காமெடி, க்ரைம் திரைப்படம் ‘அமெரிக்கனா’ (Americana). இப்படம் கடந்த 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும்.

கடந்தாண்டு வெளிவந்த காமெடி திரைப்படம் ’பேட் ஷபோ’ (Bad Shabbo)'. இப்படம் கடந்த 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். 

திரில்லர் ஹாலிவுட் திரைப்படமான ‘ஜஸ்ட் ப்ரீத்’  (Just Breathe) திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். 

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’தி நைஃப்’ (The Knife). இப்படம் கடந்த 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும். அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் என்னதான் பல படங்கள் இந்த வாரம் வெளியானாலும் அதனை பணம் செலுத்தி மட்டுமே பார்க்க வேண்டும் என்பதால் ரசிகர்கள் சற்று உற்சாகமிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: