oviya serial : கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஓவியா தொடர் இளம் வயதினரின் கவனம் ஈர்த்த தொடராக உள்ளது. குறிப்பாக இதில் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோ கல்லூரி பெண்களை அதிகம் கவர்ந்த சீரியல் நடிகராக திகழ்கிறார்.
oviya promo :
ஒவியாவுக்கும், சூர்யாவுக்கும் இருக்கும் காதல் ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், திடீரென்று உள்ளே வந்த மது சூர்யாவை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார். மதுவை திருமணம் செய்துக்கொள்வதில் சூர்யாவுக்கு துளியளவும் விருப்பமில்லை. ஏற்கனவே மனமேடை போன கல்யாணம் கடைசி நேரத்தில் நின்று விட்டது. இதற்கு நடுவில் காயத்ரி வேற. இந்நிலையில் இந்த முறை மீண்டும் மதுவுடன் சூர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்புடன் கல்யாணம் நடக்க இருக்கிறது. அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக கையில் துப்பாக்கியுடன் உள்ளே வருகிறார் ஓவியா. சூர்யாவை சுட்டு வீழ்த்துகிறார். இதற்கான ப்ரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
malar promo: மலர் - கதிர் கல்யாணத்திற்கு பிறகு அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. கமிஷனர் மகன் கொலை வழக்கில் தீவிரம் காட்டி வரும் கதிர் கொலையாளியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என எண்ணுகிறார்.மேலிடத்தில் இருந்து கதிருக்கு பிரஷரும் அதிகமாகிறது.
இந்த நேரத்தில் கிரேசை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கும் மலர் தினம் தினம் பயந்து நடுங்குகிறார். ஒரு புறம் 10 லட்சத்தை வைத்து கொண்டு , இன்னொரு பக்கம் பிரியா, அவர் அம்மாவின் சந்தேக பார்வை என மலரின் திருமண வாழ்க்கை இதிலேயே பாதி கழிகிறது.