ஓவியாவின் பெருந்தன்மை : ஆரவிற்கு நேரில் வந்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பட்டம் வென்றவர், நடிகர் ஆரவ். அவரது பிறந்த நாளுக்கு, நடிகை ஓவியா நேரில் வந்து வாழ்த்துச் சொன்னது, பரபரப்பாக பேசப்படுகிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பட்டம் வென்றவர், நடிகர் ஆரவ். அவரது பிறந்த நாளுக்கு, நடிகை ஓவியா நேரில் வந்து வாழ்த்துச் சொன்னது, பரபரப்பாக பேசப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
oviya - arav

பிக் பாஸ் குடும்பத்தில் ஒருவரான ஆரவிற்கு நடிகை ஓவியா நேரில் வந்து வாழ்த்துச் சொன்னது, பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisment

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதில் வெற்றி பெற்றவர் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தால் அவருக்கு அதிக அளவில் படங்கள் குவிந்து வருகின்றனர்.

oviya - arav 2

பிக் பாஸ் வீட்டில் அவர் இருக்கும் போது, ஹவுஸ்மேட்டான நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக இருந்தார். அவருக்கு பிரச்னை வரும் போதெல்லாம் ஆறுதல் சொல்வது, அவருடன் நேரத்தை செலவிடுவது என ஓவியாவுக்கு நெருக்கமாக இருந்தார்.

Advertisment
Advertisements

ஒரு கட்டத்தில் நடிகை ஓவியா அவரை காதலிப்பதாக சொல்ல, அவர் மறுத்தார். ஆனாலும் அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்து கமலிடம் சிக்கிக் கொண்டார். அதன் பின்னர் நூறு நாட்களும் அந்த வீட்டில் இருந்து அவர் பட்டத்தையும் வென்றார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது பிறந்த நாளை அவர் கொண்டாடினார். அப்போது, பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். நடிகர் கணேஷ் வெங்க்டராம், அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். ரைசா, காய்த்ரி ரகுராம் உள்பட பிக் பாஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டு நடிகர் ஆரவ்க்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதோடு, பார்ட்டியிலும் கலந்து கொண்டு கலகலப்பூட்டினார். இது குறித்த தகவல்கள் நடிகர் கணேஷ் வெங்கட்ராம், ட்விட்டரில் வெளியிட்ட பின்னரே தெரிய வந்தது.

ஓவியாவின் காதலை மறுத்த பின்னரும், பிறந்த நாள் விழாவுக்கு அவரை அழைத்ததை ஹவுஸ் மேட் அனைவரும் பாராட்டினர். ஆரவால் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, அவரது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய பெருந்தன்மையை அனைவரும் பாராட்டினார்கள்.

Oviya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: