/tamil-ie/media/media_files/uploads/2018/09/aan-dhevathai.jpg)
Samuthirakani in Aan Dhevathai, ஆண் தேவதை, சமுத்திரக்கனி
P Samuthirakani in Aan Dhevathai : சமுத்திரகனி நடிப்பில் உருவாகும் ‘ஆண் தேவதை’ படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.
சமுத்திரகனி என்கிற கலைஞன், சத்தமில்லாமல் சகலவிதத்திலும் சக்ஸஸ் கொடுக்கும் நபராக மாறியிருக்கிறார். பாலசந்தரின் சீடனாக படங்களிலும் சீரியல்களிலும் சுறுசுறு தேனியைப்போல் இயங்கிக்கொண்டிருந்த சமுத்திரக்கனியை தமிழ் சினிமாவின் லேண்ட்மார்க் படமான சசிகுமாரின் சுப்ரமணியபுரம் பக்கா நடிகனாக அடையாளம் காட்டியது.
அதற்குமுன்பே விஜயகாந்தை வைத்து நெறஞ்சமனசு மற்றும் உன்னை சரணடைந்தேன் படம் வெளிவந்தாலும் சமுத்திரக்கனி என்னும் பெருங்கலைஞன் அடையாளப்படுத்தப்படவில்லை. சசிகுமாரின் தயாரிப்பில் வந்த நாடோடிகள் மீண்டும் இயக்குனராக வெற்றியாளராக அவரை வெளிப்படுத்தியது.
ஆண் தேவதை: அழுத்தமான கதையில் சமுத்திரகனி
அதன் பின் இயக்குனராக மட்டுமல்ல, நடிகனாக சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரங்களில், சாட்டை, அப்பா போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு சகலகலா பாதையை உருவாக்கி கொண்டார். நடிகனாக கதைக்கு தேவையென்றால் எதிர்மறை கதாபாத்திரங்களாகட்டும், குணசித்திர கதாபாத்திரங்களாகட்டும், தயங்காமல் ஏற்று நடித்தார்.
சமுத்திரகனி தற்போது ஆண்தேவதை என்ற படத்தில் கோலிசோடா புகழ் விஜய்மில்டன் இயக்கத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆண்களுக்கு பெருமை சேர்க்கும் கதாபாத்திரம் இது! இப்படம் வெளிவந்தவுடன் சமூகத்தில் ஆண்களைப் பற்றிய மதிப்பீடே மாறும் என்று சொல்கிறது ஆண்தேவதை படக்குழு! அக்டோபர் 5-ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஆண் வர்க்கமே... இது நம்ம படம்ங்க!
திராவிட ஜீவா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.