Advertisment

குத்துச்சண்டை கதைகளம்: ஆர்யாவுடன் கைக்கோர்க்கும் பா.ரஞ்சித்?

Pa.Ranjith movies: பா.ரஞ்சித்தின் முந்தைய வெற்றிப் படங்களில் நடித்த நடிகர்கள் தினேஷ், மற்றும் கலையரசன் இதிலும் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pa ranjith joins with arya

பா.ரஞ்சித் - ஆர்யா படம்

Pa. Ranjith - Arya: நகைச்சுவை பொழுதுபோக்குப் படமான ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ வெளியாகி ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையில், தற்போது ‘மகாமுனி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ‘மெளனகுரு’ திரைப்படத்தின் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இயக்குநர் சாந்தக்குமார் ‘மகாமுனி’யை இயக்கியிருக்கிறார். மகா மற்றும் முனி என இருவேறு கதாபாத்திரங்களில் ஆர்யா நடிக்க, அவருடன் இணைந்து, இந்தூஜா, மஹிமா நம்பியார், ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். சாதி - அரசியலை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு, வட சென்னையின் பின்னணியில் நிகழும் ஒரு கதையில் ஆர்யா நடிக்கிறாராம். இதனை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ரஞ்சித்தின் முந்தைய வெற்றிப் படங்களில் நடித்த நடிகர்கள் தினேஷ், மற்றும் கலையரசன் இதிலும் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ரஞ்சித் இறுதியாக ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து, ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகியப் படங்களை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் ’பிர்சா முண்டா’ திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியது. தற்போது இந்தப்படம் ப்ரீ புரொடக்‌ஷனில் உள்ளது. மறுபுறம் இயக்குநர் சக்தி செளந்தரராஜன் இயக்கும் ’டெடி’ படத்தில் சாயிஷாவுடன் நடித்து வருகிறார் ஆர்யா!

Pa Ranjith Arya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment