scorecardresearch

இந்துக் கடவுள்களை இழிவு படுத்தியதாக புகார்: சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு

இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி, இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வைரலானதை அடுத்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Pa Ranjith's assistant director Viduthalai Sigappi insult speech on Hindu Gods police case filed, இந்துக் கடவுள்களை இழிவு படுத்தியதாக புகார்: சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு, Pa Ranjith's assistant director Viduthalai Sigappi insult speech on Hindu Gods police case filed
இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது வழக்குப்பதிவு

இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி, இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வைரலானதை அடுத்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி. இவர் ஏப்ரல் 30-ம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து, பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், இந்த பேச்சு, இந்து மதத்தினரை மனவேதனை அடைய வைத்துள்ளதுடன், சமூகத்தில் இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் நோக்கில் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில், கவிஞரும், உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல், எந்த ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி இந்து கடவுள்கள் குறித்து இழிவுபடுத்தியதாக வீடியொ வைரலானதை அடுத்து, புகாரின் பேரில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pa ranjith assistant director viduthalai sigappi insult speech on hindu gods police case filed