Advertisment
Presenting Partner
Desktop GIF

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த இயக்குனர் பா.ரஞ்சித் பிறந்தநாள்; த.செ.ஞானவேல் பாராட்டு

அடித்தட்டு மக்களின் துன்பங்களுக்கு மேல்தட்டு ஹீரோக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு மாறாக, இயகுனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமா களத்தை உடைத்து பல திரைப்பட இயக்குனர்களுக்கு விளிம்புநிலை மக்களின் பார்வையில் கதை சொல்வதற்கு வழி வகுத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pa Ranjith’s birthday, Jai Bhim, director TJ Gnanavel, decodes politics in his work Pa Ranjith, Jai Bhim, Pa Ranjith, இயக்குனர் பா ரஞ்சித், பா ரஞ்சித் பிறந்தநாள், த செ ஞானவேல் பாராட்டு, தமிழ் சினிமா, அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா, Tamilnadu, Tamil cinema, Surya, Dalit cinema, dalit politics, Pa Ranjith movies, Attakathi, Madras, Kaala, Kabali, SaarPatta

இயக்குனர் பா.ரஞ்சித் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உயர் ஜாதியில் இருந்து வரும் ஹீரோக்களின் நற்பண்புகளை சினிமாக்காரர்கள் படம் எடுத்தார்கள். இத்தகைய படங்களில், பொதுவாக, விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஆதரவற்றவர்களாகவும், தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் காட்டப்படுவார்கள்.

Advertisment

நல்ல எஜமானர் தனது வேலைக்காரர்களிடம் கருணையும் இரக்கமும் கொண்டவராக இருப்பார், அதே சமயம் கெட்ட எஜமானர் இரக்கமின்றி அவர்களை மோசமாக நடத்தி சுரண்டுவார். சமூகப் படிநிலையில் உயர்நிலையில் இருந்து வந்த இரண்டு மனிதர்களுக்கு இடையில், அடித்தட்டு மக்கள் தங்களுக்கென எந்த நிறுவனத்தையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் எப்போதும் தங்கள் எஜமானர்களின் தயவில் இருந்தனர்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் வருகையால் தமிழ்த் திரையுலகில் இருந்த இத்தகைய நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் அடியோடு மாறியது. இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் சமூகப் படிநிலைக்கு சவால் விடும் வகையில் தமிழ் சினிமாவின் இலக்கணத்தை மாற்றியமைத்துள்ளார்.

அவருடைய திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறை பற்றிய உயர்தட்டு சமூகம் கொண்டிருந்த தவறான கருத்துகலை முன்முடிவுகளை முறியடித்தன. அவருடைய திரைப்படங்கள் சமூக அநீதி மற்றும் சாதிய அமைப்பினால் ஏற்படும் சமத்துவமின்மை பற்றி விவாதிக்க புதிய வெளிகளைத் திறந்தன. மேலும் அவருடைய படங்கள் பரந்த பார்வையாளர்களை வளர்த்து, சாதிய சமூகத்தின் தீமைகளைப் பற்றி பேசும் திரைப்படங்களுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாக்கியது.

அடித்தட்டு மக்களின் துன்பங்களைக் கண்டு மேல்தட்டு ஹீரோக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு எதிறாக, இயகுனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமா களத்தை உடைத்து பல திரைப்பட இயக்குனர்களுக்கு விளிம்புநிலை மக்களின் பார்வையில் கதை சொல்வதற்கு வழி வகுத்தார்.

ரஞ்சித் தொடங்கி வைத்த இந்தப் போக்கில் பயனடைந்தவர்களில் திரைப்பட இயக்குனர் த.செ.ஞானவேலும் ஒருவர். “ரஞ்சித்தின் வருகை தமிழ் சினிமாவுக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு என்றுமே இடமில்லை. அப்படி ஒரு இடம் இருந்தாலும், அது நியாயமற்ற இடமாக இருக்க வாய்ப்புள்ளது. அவர் பிரச்சினைகளை துணிச்சலுடனும், தைரியமாகவும் நிறைய அரசியல் துல்லியத்துடனும் கையாண்டார்” என்று ஞானவேல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கிய சமீபத்திய வெற்றி படமான ஜெய் பீம் படத்தில் சூர்யா நடித்துள்ளார். “இந்தப் படம் (ஜெய் பீம்) தமிழ்நாட்டிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரு விவாதத்தை உருவாக்கும் என்று நினைத்தேன். ஆனால், உலகம் முழுவதும் இது போன்ற ஒரு சலசலப்பை உருவாக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று கூறினார்.

சமகால தமிழ் சினிமாவில் ஜெய் பீம் போன்ற படங்கள் வளர அடித்தளமிட்டது ரஞ்சித்தின் படங்கள்தான். மேலும், ரஞ்சித்தின் வேலையை ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்க்க ஞானவேல் மறுக்கிறார். “ரஞ்சித்தை எந்த ஜாதிக்காகவும் குரல் கொடுப்பவர் என்று நான் சுருக்கமாக வரையறுக்க மாட்டேன். அவர் (சமூக) சமத்துவத்துக்காக குரல் கொடுப்பவர் என்று நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை ஒரு ஏற்றத்தாழ்வு இருக்கிறது, அந்த ஏற்றத்தாழ்வை ரஞ்சித்தின் வருகை சரி செய்கிறது.

இயக்குனர் த.செ. ஞானவேல் ஒரு திரைப்படத்தை எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினருடன்வேறுபடுத்தி பார்ப்பது மிகவும் எளிமையானது என்று குறிப்பிட்டார். “சாதி தடைகளை அகற்றி சமத்துவத்தையும் சமூக நீதியையும் அதிகரிப்பதே விளிம்புநிலை சமூகங்களுடைய குரலின் நோக்கம். ஒரு திரைப்படத்தை வெறுமனே சாதி சார்ந்த படம் என்று அழைப்பது அரசியல் விழிப்புணர்வு இல்லாததன் அடையாளம். ஒரு ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவரின் குரலுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: முந்தையவர் சாதியின் பெயரால் மேன்மையைத் தக்கவைக்க முயல்கிறார். பிந்தையவர், சாதி அமைப்பையே தகர்க்க முயற்சிக்கிறார். ஒருவர் சமத்துவமின்மையை மீண்டும் நிலைநிறுத்தவும் மற்றொருவர் சமத்துவத்தை உயர்த்தவும் பயன்படுகிறது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது”என்று த.செ.ஞானவேல் கூறினார்.

“நாங்கள் சாதி சார்ந்த திரைப்படங்களை உருவாக்கவில்லை. சாதியின் பெயரால் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம் பற்றி பேசுகிறோம். ரஞ்சித்தின் வருகையும் அதைத் தொடர்ந்து (தமிழ் சினிமாவில்) ஏற்பட்ட மாற்றங்களும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதை எளிதாக்கியுள்ளன” என்று ஞானவேல் மேலும் கூறினார்.

பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் சாதி அமைப்பிலிருந்து உருவாகும் பாகுபாடு பற்றிய விவாதங்களை உருவாக்கி, சமூகத்தில் உள்ள மக்களிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவியது, ஒருவருக்கொருவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவியது.

“அட்டகத்தி (பா. ரஞ்சித்தின் முதல் படம்) ஒரு தைரியமான படம். அதுவரை நார்த் மெட்ராஸ் என்றால் வன்முறை, போதைப்பொருள் கடத்தல், அழுக்கு மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்கும் இடமாக திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டது. அட்டகத்திதான் நார்த் மெட்ராஸ் மக்களின் வாழ்வியலை சரியாக கொண்டாடியது. ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தைவிட எனக்கு அட்டகத்தி படம் பா. ரஞ்சித்தின் மிக முக்கியமான படம் என்று நினைக்கிறேன். கானா பாடல்களின் அழகையும் கொண்டாட்டத்தையும் அந்த படத்தில் அழகாக காட்டியிருப்பார். மக்கள் அந்தப் படத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதுதான் முக்கியம்” என்று இயக்குனர் ஞானவேல் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Pa Ranjith Surya Dalit Gnanavel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment