New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/06/Pa-Ranjith-Boxer-Look-Salpetta-Parambarai.jpg)
Pa Ranjith Boxer Look, Salpetta Parambarai
இந்த படத்திற்கான ஆர்யாவின் தோற்றம் ஏற்கனவே ரஞ்சித்தின் ரசிகர்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Pa Ranjith Boxer Look, Salpetta Parambarai
Pa.Ranjith's Boxer Picture: நடிகர் தினேஷ் நடித்த ’அட்டகத்தி’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் ’சல்பேட்டா’ படத்தை இயக்குவதில் மும்முரமாக உள்ளார். 80-களில் வட சென்னை குத்துச்சண்டை வீரர்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், ஆர்யா மற்றும் கலையரசன் குத்துச்சண்டை வீரர்களாக நடிக்கிறார்கள். ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம், தமிழில் அறிமுகமான நடிகை துஷாரா விஜயன், பெண் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பல நடிகைகள் இந்த பாத்திரத்திற்காக ஆடிஷன் செய்திருந்தாலும், துஷாரா தான் இந்த பாத்திரத்திற்கு பொருந்துவார் என்று ரஞ்சித் உணர்ந்ததாக தெரிகிறது.
பிஸ்கட் என நினைத்து ஜெலட்டின் குச்சியைக் கடித்த குழந்தை: வாய் சிதறி மரணம்
பார்த்திபனின் ’கதை திரைக்கதை வசனம்’ படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சல்பேட்டா படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக, படப்பிடிப்பு தொடங்கவில்லை.
படத்தைப் பொறுத்தவரை, ஆர்யா, கலையரசன் என இரு நடிகர்களும் தங்கள் உடலமைப்பைக் குறைத்துள்ளனர். இந்த படத்திற்கான ஆர்யாவின் தோற்றம் ஏற்கனவே ரஞ்சித்தின் ரசிகர்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது, ரஞ்சித் தானே குத்துச் சண்டை பயிற்சி செய்யும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 1,018 ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும் முறை மாற்றம்: புதிய அரசாணை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம், ’பரியேறும் பெருமாள்’, ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.