/indian-express-tamil/media/media_files/5b3wd8HnrdNLoZL7Tnd3.jpg)
இயக்குநர் பா.ரஞ்சித் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார்.
Isaignani-ilayaraja | pa-ranjith:தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சர்ப்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.
சீயான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலன் திரைப்படம் வருகிற ஜனவரி 26ம் தேதி வெளியாகியாகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார். அப்போது பாபா சாகேப்பின் காதல் கடிதம் புத்தகத்தை பரிசாக கொடுத்தார்.
சட்டமேதையான அம்பேத்கர் தனது மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களை உள்ளடக்கியதுதான் அந்தப் புத்தகம். பா. ரஞ்சித் மரியாதை நிமித்தமாக இளையராஜாவை சந்தித்ததாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான முதல் படியாகவும் இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளார்கள்.
❤️❤️❤️எண்ணமெல்லாம் வண்ணமம்மா!!!❤️❤️❤️ pic.twitter.com/l2bb7uvfFX
— pa.ranjith (@beemji) December 21, 2023
தீவிர ரசிகர்
ரஞ்சித் இளையராஜாவின் தீவிர ரசிகர் ஆவார். அவர் இயக்கிய மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் சில காட்சிகளில் அவரது பாடல்களை பயன்படுத்தி இருப்பார். இந்நிலையில், இன்று ரஞ்சித் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் 'எண்ணமெல்லாம் வண்ணமம்மா' என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.