சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நானா படேகர் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தை இறுதியாக இயக்கியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித். விமர்சன ரீதியாக அதிக பாராட்டுகளை இப்படம் பெற்றிருந்தது.
Advertisment
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
இதனைத் தொடர்ந்து ஆர்யா, தினேஷ் மற்றும் கலையரசன் ஆகியோரின் நடிப்பில் 'சல்பேட்டா பரம்பரை' என்ற படத்தின் ஸ்கிரிப்ட்டில் பணியாற்றி வருகிறார் ரஞ்சித். இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' அதியன் அதிரையின் 'இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு' என இரண்டு படங்களை தயாரித்திருந்தார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் ஒரே நேரத்தில் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 5 படங்களின் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் படங்களை நீலம் புரொடக்ஷன்ஸுடன், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதனை இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி (மேற்கு தொடர்ச்சி மலை), அகிரன் மோசஸ், ஃப்ராங்க் ஜேக்கப் மற்றும் சுரேஷ் மாரி ஆகியோர்கள் தலா ஒவ்வொரு படத்தையும் இயக்குகிறார்கள். இந்த ஐந்து படங்களின் நடிகர்கள் மற்றும் குழுவினரின் விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள் படக்குழுவினர்.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...