”எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே பிடிப்பாங்க”: வைரலாகும் பா. விஜய்யின் பேச்சு !

ஜிவி பிரகாஷ், யூடியூப் பிரபலங்கள் ஆகியோ சமூக வலைத்தளங்களின் மூலம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அனைத்து பிரச்சனை குறித்து  கவிஞர் பா. விஜய்  எழுதியுள்ள கவிதை வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களாக தமிழகமே போராட்டக் களமாக மாறி வருகிறது.காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்காதை எதிர்த்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், இளைஞர்கள் என அனைவரும் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை, சென்னையில் ஐபிஎல் போட்டிகளே நடக்கக் கூடாது என்று போரட்டம் நடத்தப்பட்டது. இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், வெற்றிமாறன், கவுதமன் ஆகியோரும் ஐபிஎல் க்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.  ஜிவி பிரகாஷ்,  யூடியூப் பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைத்தளங்களின் மூலம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன.

இந்நிலையில், கவிஞரும் , பாடலாசிரியருமான  பா. விஜய்  காவிரி மேலாண்மை  வாரியம் மற்றும் ஐபிஎல் போராட்டம்  இந்த இரண்டு பிரச்சனைகளை குறித்து  விழிப்புணர்வு கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதையை தானே வாசித்து வீடியோ  மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசை நேரடியாக சாடும் படியாக அமைந்துள்ள இந்த கவிதை இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் சமூகவலைத்தளங்களிலும் தீயாக பரவி வருகிறது.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close