இதை விட யாரும் புருஷன கேவலப்படுத்த முடியாதும்மா.. பாவம் கணேசன் மாமா!

குடும்பத்தை கேவலமாக பேசும் மாமா, தாய்மாமன் சீர் குறித்து இன்னும் கணேசனை மட்டப்படுத்துகிறான்.

paavam ganesan vijaytv serial paavamganesan
paavam ganesan vijaytv serial paavamganesan

paavam ganesan vijaytv serial paavamganesan : கணேசனின் அக்கா கணவர் வீட்டில் கஞ்சத்தனமாக இருப்பவர். அவர் கிச்சனில் இருக்கும் பொருட்களை கூட அளந்து அளந்து தான் கொடுப்பவர்.

அவர் கணேசன் குடும்பத்தை பற்றி மிகவும் மோசமாக பேசுகிறார். அதனால் கணேசனின் அக்கா கடும் கோபம் அடைகிறார்.மறுபுறம் கணேசன் தனது தங்கைகளின் படிப்பு செலவு மற்றும் வாடகை கொடுப்பதற்காக பணம் எப்படி ரெடி செய்வது என தெரியாமல் கணேசன் விழித்து கொண்டிருக்கிறார்.

இப்படி பல பிரச்சனைகள் இருக்க, கணேசனின் அக்கா மகள் வயதுக்கு வருகிறாள். அவளுக்கு தாய்மாமன் முறை செய்யும் இடத்தில் இருப்பது கணேசன் தான். ஏற்கான்வே, குடும்பத்தை கேவலமாக பேசும் மாமா, தாய்மாமன் சீர் குறித்து இன்னும் கணேசனை மட்டப்படுத்துகிறான்.

இந்த நேரத்தில் தான் வேலை செய்யும் இடத்தில் 3லட்சம் கடனாக பெறுகிறான் கணேசன்.ஆனால் அந்த பணமும் தம்பியின் மருத்துவ செலவு, எதிர்பாராத செலவுக்குபோய்விடுகிறது. தாய்மாமன் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் கணேசன் இருக்கிறான். அதுமட்டுமில்லை, 3 லட்சம் பணத்திற்கு உடனே எங்கே போவான் கணேசன் பாவம்ல்லா. இதற்கிடையில், போலீஸ் பிரச்சனை வேற

இப்படி ஏகப்பட்ட பிரச்சனைக்கு இடையில் தாய்மாமன் முறையை நல்ல படியாக சிறப்பாக செய்து முடிக்கிறான் கணேசன். ஆனால், அவனை பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தது பழி பேசாமல் இருக்கலாம். ஆனால், கணேசனின் மாமா, தனது மனைவி தங்கை மீதே பழிச்சொல் போட்டு அசிங்கப்படுத்துகிறார். மொத்த குடும்பத்தையும் கேவலமாக பேசி அவர் செய்யும் அட்டூழியங்கள் பார்ப்பவர்களையும் கோபம் அடைய செய்கிறது. இந்த நேரத்தில் தான் ஃபோட்டோகிராஃபர் வீட்டுக்கு வந்து அனைத்து உண்மைகளையும் கொட்டி தீர்க்கிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Paavam ganesan vijaytv serial paavamganesan episode hotstar pavam ganesan naveen

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com