Karuna Vilasini news in tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களுள் ஒன்று ‘பாவம் கணேசன்’ சீரியல். இந்த சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடிப்பவர் தான் நடிகை விலாஷினி. இவரின் கதாபாத்திரம் கணவருக்கு மிகவும் பயந்து பயந்து நடப்பவர் போல் அமைக்கப்பட்டு இருக்கும். அம்மா வீட்டில் பேசக் கூட கணவரிடம் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கும். வீட்டுக்கு கஷ்டம் தரக்கூடாது என நினைத்து சோகங்களை மறைத்து வாழும் ஒரு சராசரி பெண்ணாக வருகிறார் இந்த சீரியலில் காட்டப்படும் இவரது திருமண வாழ்க்கை போல தான் நிஜத்திலும் நடந்து இருக்கிறது.

நடிகை விலாஷினி பிரபல ரேடியோ சேனலில் ஆர்.ஜேவாக பணியாற்றியவர். டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. மருது படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு அசத்தலான கிராமத்து குரலில் குரல் கொடுத்தவர் இவர் தான். மேலும், இவர் இசைஞானி இளையராஜவின் உறவுக்கார பெண் ஆவார். இளையராஜா இவருக்கு மாமா முறையாம். அவர் தான் இவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். நன்றாக சென்று கொண்டிருந்த இவரது திருமண வாழ்க்கையில் பல திருப்பங்கள் நடந்திருக்கிறது.

இந்த சீரியலில் வரும் கணவரை விட இவரது சொந்த கணவர் மிகவும் மோசமானவராம். மேலும், இவரது கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இவரை ஏமாற்றி இருக்கிறார். எனவே, அவரிடம் இருந்து முறையாக விவகாரத்து பெற்று இப்போது தனியாக வாழ்ந்து வருவதாக சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது சீரியல், டப்பிங் என பிசியாக இருக்கிறார் நடிகை விலாஷினி. இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் தேடி வருவதாகவும் கூடிய விரைவில் இவரை திரையில் பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil