கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி... பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மரணம்

இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87-வது வயதில் காலமானார்.

இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87-வது வயதில் காலமானார்.

author-image
Meenakshi Sundaram S
New Update
saroja devi

அபிநய தேவதை... பழம் பெரும் நடிகை சரோஜாதேவி மரணம்

இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87-வது வயதில் காலமானார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடு காரணமாக காலை 9 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய திரையுலகினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவரது மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்ற அடைமொழியுடன் கன்னட திரையுலகில் கொடிகட்டிப் பறந்த சரோஜா தேவி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது முத்திரையைப் பதித்தார். அவரது நீண்ட திரையுலகப் பயணத்தில், சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் 26 படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமா ஜாம்பவான்களுடன் இணைந்து மறக்க முடியாத பல வெற்றிப் படங்களை அளித்த சரோஜா தேவி "அன்னை இல்லம்," "நாடோடி மன்னன்," "பாகப்பிரிவினை," "திருவிளையாடல்" போன்ற படங்களில் அவரது பங்களிப்பு இன்றும் பேசப்படுகிறது. இவரது இயல்பான நடிப்பு, வசீகரமான புன்னகை மற்றும் கதாநாயகர்களுடன் இணக்கமான ஜோடிப் பொருத்தம் ஆகியவை அவரை ஒரு தலைமுறை ரசிகர்களின் கனவு நாயகியாக மாற்றின.

கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த பி. சரோஜா தேவி, இந்திய சினிமாவின் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. பல மாநில அரசுகளின் விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

Advertisment
Advertisements

திரைப்படங்களில் இருந்து விலகிய பின்னரும், பொதுநிகழ்வுகளில் பங்கேற்று வந்த சரோஜா தேவி, திரைத்துறைக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவரது மறைவு, ஒரு தலைசிறந்த நடிகையை மட்டுமல்ல, இந்தியத் திரையுலகின் ஒரு பொற்காலத்தின் நினைவுகளையும் சுமந்து செல்கிறது.

அவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் நேரடி இரங்கல் செய்திகள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பி. சரோஜா தேவியின் மறைவு, இந்திய சினிமாவின் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவரது கலைப் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: