scorecardresearch

ஃபேஸ்புக் லைவ்வில் வெளியான பத்மாவத் சினிமா!

இன்று வெளியான பத்மாவத் முழு படமும் பேஸ்புக் பக்கம் மூலம் கசிந்தது ‘ஜாடன் கா அதா’ என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

padmavat

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்’. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது’ என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன.

இதனிடையே, ‘பத்மாவத்’ திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது’ என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து `பத்மாவத்’ திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரியானா மாநிலம், குர்கிராமில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. சென்னையில் நேற்று நள்ளிரவு பத்மாவத் திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் பத்மாவத் முழு படமும் பேஸ்புக் பக்கம் மூலம் கசிந்தது ‘ஜாடன் கா அதா’ என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதை எழுதும் நேரத்தில், 15,000 க்கும் அதிகமானோர் இந்த இணைப்பைப் பகிர்ந்துள்ளனர் மற்றும் பேஸ்புக்கில் 3.5 லட்சம் பேர் வீடியோ காட்சிகளை பார்த்து உள்ளனர். திரைப்படத்தை திரையிட்டு ஒரு தியேட்டரில் இருந்து நேரடியாக இது ஒளிபரப்பப்பட்டு உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Padmavat sanjay leela bhansali film padmavat live by facebook page jaaton ka adda