scorecardresearch

பகல் நிலவு சீரியல் நடிகை சிந்து கணவர் பிரபல நடிகரா? ஃபேமிலி போட்டோஸ்

மிடில க்ளாஸ் மாதவன், ஆனந்தம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷியாம் கணேஷ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

Sindhu
நடிகை சிந்து குடுமபம்

பகல் நிலவு சீரியல் நடிகை சிந்து வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது கணவரை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

தற்போதைய காலக்கட்டத்தில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பதுதான். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகர், ஷியாம் கணேஷ்.

ராதிகாவின் சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஷாம் கணேஷ், தொடர்ந்து ராஜ்டிவி ஜெயாடிவி உள்ளிட்ட சேனல்களில் பல தொடர்களில் நடித்துள்ளார். குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து பிரபலமான ஷியாம் கணேஷ் யூத் படத்தில் நடிகர் விஜயுடனும், தீனா படத்தில் அஜித்துடனும் நடித்திருப்பார்.

மிடில க்ளாஸ் மாதவன், ஆனந்தம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷியாம் கணேஷ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சீரியல் நடிகை சிந்துவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமான சிந்து, சன்டிவியின் தெய்வமகள் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல சீரியலகளில் நடித்துள்ள சிந்து தற்போது தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்டஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pagal nilavu serial actress sindhu family photos viral on social

Best of Express