கர்ப்ப காலத்தில் கொரோனா தடுப்பூசி போடலாமா? சீரியல் நடிகை சமீரா ஷெரிப் வீடியோ!

Pagal Nilavu serial actress sameera sherief video Tamil News: தற்போது கர்ப்பமாக உள்ள 'பகல் நிலவு' சீரியல் நடிகை 'சமீரா ஷெரிப்' கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்ட வீடியோவை அவரது யூடூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Pagal Nilavu serial actress sameera sherief video Tamil News: தற்போது கர்ப்பமாக உள்ள 'பகல் நிலவு' சீரியல் நடிகை 'சமீரா ஷெரிப்' கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்ட வீடியோவை அவரது யூடூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pagal Nilavu serial Tamil News: Vaccine During Pregnancy serial actress sameera sherief video

 Serial Actress Sameera Sherief Tamil News: இந்தியாவில் உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கு மேல் பாதிவாகி வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 86,498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2,123 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய - மாநில அரசுகள் பல வழிகளில் முயற்சி செய்து வரும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அனைவரும் குறிப்பிடுகின்றனர். கிராமங்கள் மற்றும் நகர் புறங்கள்தோறும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மனைகள் உள்ளதாலும், மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிக, நடிகைகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வரும் நிலையில், கர்ப்பமாக இருக்கும் 'பகல் நிலவு' சீரியல் நடிகை 'சமீரா ஷெரீஃப்' தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இந்த வீடியோவை அவரது யூடூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

publive-image
சமீரா ஷெரீஃப்
Advertisment
Advertisements

தடுப்பூசி செலுத்திய பிறகு அதன் விளைவுகள் குறித்து 12 மணி நேரம், 24 மணி நேரம், 36 மணி நேரம் ஆகிய இடைவெளிகளில் பதிவு செய்து பேசியுள்ள சமீரா ஷெரீஃப்புக்கு உடல்வலி, ஜுரம் போன்ற எந்த பக்க விளைவுகளும் காட்டவில்லையாம். தடுப்பூசி செலுத்திக்கொண்ட கையை தூக்கும் போது மைல்டான வலி ஏற்படுகிறதாம்.

மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம் என்று நினைக்க கூடாது என கண்டிப்புடன் கூறியுள்ள சமீரா, அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: