scorecardresearch

லெஜன்ட் சரவணன் ஹீரோயினை கல்யாணம் பண்ண ரெடி: பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னணி வீரர் அதிரடி

கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் ஊர்வசி தமிழில் அறிமுகமானார்.

Urvasi
ஊர்வசி ரவுத்தேலா – நசீம் ஷா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு கிரிக்கெட் வீரர் தற்போது திருமண ப்ரபோசலை அனுப்பியுள்ளார்.

சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. தொடர்ந்து மிஸ்டர் அறிவாடா என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர், இந்தி பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். இதில் கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், ஊர்வசி தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது ரகசிய செய்திகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தக்ககூடியவர்.

அந்த வகையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி இணையதளத்தை அதிர வைத்தார். இதன் மூலம் நசீம் ஷாவுக்கு ஊர்வசியும் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானக நிலையில், ஊர்வசி யார் என்று தனக்குத் தெரியாது என்று நசீம் ஷா  கூறியிருந்தார். ஆனால் தற்போது அந்த கிரிக்கெட் வீரர் மறைமுகமாக நடிகை ஊர்வசிக்கு திருமண ப்ரபோசலை அனுப்பியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில்,, ஊர்வசி பற்றி நசீமிடம் கேட்கப்பட்டபோது, நான் இது பற்றி ஏதாவது பேசினால் நீங்கள் வைரலாக்குவீர்கள். மணமகள் தயாராக இருந்தால் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அதே சமயம் ஊர்வசி பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தபோது “ஊர்வசி ரவுத்தேலா யார் என்று எனக்குத் தெரியாது. நான் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

பொதுவாக மக்கள் எனக்கு வீடியோக்களை அனுப்புவார்கள் ஆனால் எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் சிறப்பு எதுவும் இல்லை, ஆனால் கிரிக்கெட் பார்க்க வருபவர்களுக்கும் அதிக மரியாதை கொடுப்பவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்று கூறியிருந்தார்.

ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னையும் நசீமையும் உள்ளடக்கி ரசிகர் உருவாக்கிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். “இரண்டு நாட்களுக்கு முன்பு, எனது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து அழகான திருத்தங்களையும் (சுமார் 11-12) அதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களைப் பற்றி எதுவும் தெரியாமல் பகிர்ந்து கொண்டது.

ஊடகங்கள் எந்தவிதமான செய்திகளையும் உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்களை நேசிக்கிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை ஊர்வசி இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துடன் கடந்த காலத்தில் தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pakistan cricketer naseem shah who said i dont know who urvashi rautela is sends the actor a marriage proposal if the bride is ready