New Update
/indian-express-tamil/media/media_files/F6qNMvUWkkFKCK1gmbrd.jpg)
கல்கி 2898 ஏடி
பான் இந்தியா படமாக வெளியான கல்கி திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், 5-ம் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி 2898 ஏடி
பிரபல தெலுங்கு பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில் 4 நாட்களில் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்த பிரபாஸ் அந்த படததிற்கு பின் நடித்த எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிரபாஸ் கல்கி படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் குறித்து பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதே சமயம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியான உடனே தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கல்கி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளா. கடந்த ஜூன் 27-ந் தேதி இந்த படம் பிரம்மாண்டமாக வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், மகாபாரதம் என்ற புராணக்கதையை அடிப்படையாக வைத்து அறிவியல் தொழில்நுட்பத்தை சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வெளியான முதல் நாள் கல்வி வசூலில் சாதனை படைத்திருந்தாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்களை கிடைத்தது. ஆனாலும் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்தது.
அதேபோல் கல்கி வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 5 நாட்கள் முடிவில் ரூ575 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கல்கி 2898 ஏடி திரைப்படம் ஒரு வாரத்தில் தனது மொத்த செலவுத்தொகையையும் வசூலித்துவிடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.