சின்னத்திரையின் முக்கிய சீரியல்கில ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீரியல் ஷூட்டிங்கின்போது என்ன நடக்கிறது என்பது குறித்து நடிகை ஹேமா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
சின்னத்திரை சீரியல்கள் தற்போது இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மக்கள் வாழ்வில் சீரியல் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது என்று கூறலாம். அதற்கு ஏற்றார் போல் சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல்களையும், பழைய சீரியல்களின் விறுவிறுப்பு குறையாமலும் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் முக்கியமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப உறவுகள், கூட்டுக்குடும்பத்தின் ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என பல தேவைகளை வலியுறுத்தும் இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், ஹேமா, வெங்கட், குமரன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தமிழில் வெற்றி பெற்ற இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட அங்கேயும் ஹிட் அடித்துள்ளது. தற்போது சீரியலில் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றுவிட்ட கதிர், ஒரு ஹொட்டலை நடத்தி வருகிறார். அங்கு அவர்களை மட்டம் தட்டும் முல்லையின் அக்கா மற்றும் அம்மா வேலையை பார்த்து வருகின்றனர்.
மறுபுறம் இங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க முடிவு செய்கின்றனர். இதை வளைத்து போ மீனாவின் அப்பா முயற்சிக்க, மூர்த்தியோ அதை வேண்டாம் என்று கூறிவிடுகிறார். இதனால் மூர்த்தி அடுத்து வீட்டை யாருக்கு விற்க போகிறார்? ஹோட்டலில் கதிர் லாபம் பார்த்தாரா அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அனைவருமே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெறும் சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பதிவிட்டு வருகினறனர். அந்த வகையில் தற்போது மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் தனது ஹெமாஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாடடில் நடந்த நிகழ்வுளை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
முதலில் தான் வீட்டை விட்டு கிளம்புவதில் தொடங்கி ஷூட்டிங் முடிந்து தான் வீடு திரும்பியதை வரை பதிவு செய்துள்ள அவர், கதிர் முல்லை ரூமை எப்படி ரெடி பண்ணுவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சிக்ளை எப்படி எடுப்பார்கள் என்பது குறித்து பேசியுள்ளார். மேலும் தற்போது வீ்ட்டிலேயே பியூட்டி பார்லர் வைத்துள்ள ஐஸ்வர்யாவுக்கு ஷூட்டிங்கிற்கு முன்பு அதை எப்படி ரெடி பண்ணுவார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.