கண்ணுல லென்ஸ் போட்டா நயன்தாரா ஆயிடுவீங்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு வந்த சோதனை!

Pandian Stores Actress acts like Netrikan Nayanthara Tamil News ‘விரைவில் திரைப்படத்தில் உங்களைப் பார்க்க விரும்புகிறோம்’ உள்ளிட்ட பாசிட்டிவ் கமென்ட்டுகள் ஒருபுறம் பாராட்டினார்கள்.

Pandian Stores Actress acts like Netrikan Nayanthara Tamil News
Pandian Stores Actress acts like Netrikan Nayanthara Tamil News

Pandian Stores Actress acts like Netrikan Nayanthara Tamil News : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘நெற்றிக்கண்’. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து மக்களிடத்தில் எதிர்பார்ப்பு அதிகமானது.

கடந்த 13-ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியான இந்தத் திரைப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இத்திரைப்படத்திலிருந்து ஒரு சிறிய உரையாடலை எடுத்து, நயன்தாராவைப் போல் நடித்து நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இந்த பாண்டிய ஸ்டோர்ஸ் தொடரின் நடிகை.

ஆரம்பத்தில் கவர்ச்சி புயலாக நயன்தாரா வலம்வந்திருந்தாலும், சமீப காலமாக அவர் தேர்வு செய்யும் திரைப்படங்கள் அத்தனையும் கதாபாத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவைதான். மாயா, டோரா முதல் விசுவாசம், மூக்குத்தி அம்மன் வரை பல வித்தியாச கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் நெற்றிக்கண் திரைப்படத்தில் கண்பார்வையற்ற உயர் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் வரும் விமர்சனத்திற்குரிய வசனம் ஒன்றை தேர்ந்தெடுத்து நயன்தாரா போலவே நடித்து மக்களின் பார்வையை ஈர்த்திருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா.

நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா போன்று மேக்-அப் அணிந்தும் மற்றும் லென்ஸ் பொருத்திக்கொண்டும், அவரைப்போலவே அந்த சர்ச்சைக்குரிய வசனத்தையும் பேசி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் காவ்யா. இதற்கு மக்களிடத்தில் இருந்து பல்வேறு விதமான கமென்ட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. ‘வேற லெவல்’, ‘மாஸ்’, ‘விரைவில் திரைப்படத்தில் உங்களைப் பார்க்க விரும்புகிறோம்’ உள்ளிட்ட பாசிட்டிவ் கமென்ட்டுகள் ஒருபுறம் இருக்க, ‘கண்ணுல லென்ஸ் போட்டா நயன்தாரா ஆகிடுவீங்களா?’ போன்ற எதிர்மறை கமென்ட்டுகளும் குவிந்துகொண்டுதான் இருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores actress kavya arivumani acts like netrikan nayanthara tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com